சிறந்த திருநங்கைக்கான விருது! தமிழக அரசின் விருதை பெற்ற சிவில் இன்ஜினியர் மர்லிமா! யார் இவர்?
சென்னை: 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருதை விழுப்புரத்தைச் சேர்ந்த ஏ மர்லிமா முரளிதரன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றார்.
சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த மூன்றாம் பாலினத்தவருக்கான விருதை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விருதும் அறிவிக்கப்பட்டது,
கடந்த 25 ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டிற்காகச் சிறப்பாகப் பணியாற்றி வரும் செஞ்சியைச் சேர்ந்த மர்லிமாவுக்கு இந்த ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது.

சிறப்பு விருது
சிறந்த திருநங்கைக்கான விருதை முதல்வர் ஸ்டாலினடம் இருந்து மர்லிமா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விருதுடன் சேர்ந்து அவருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.

1995 முதல்
இது தொடர்பாக மர்லிமா முரளிதரன் கூறுகையில், "நான் 1995ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த போது நான் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். இப்போது செஞ்சியில் எனக்குச் சொந்தமாக ஒரு அலுவலகம் உள்ளது. கட்டுமான-தொடர்பான பிஸ்னஸ் செய்து வருகிறோம்.

உதவி
இதுவரை நான் உதவி தேவைப்படும் 70 திருநங்கைகளுக்கு உதவி உள்ளேன். 8 திருநங்கைகளுக்கு ஜூஸ் கடை, மாடு, ஆடு வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட எனது சொந்த நிதியை அளித்துள்ளேன். பலருக்கு வேலைகளையும் ஏற்படு செய்து கொடுத்துள்ளேன். செஞ்சி, கண்டாச்சிபுரம், திருவண்ணாமலையைச் சேர்ந்த மூன்று திருநங்கைகளுக்கு வீடு கட்டவும் உதவி உள்ளேன்.

பலருக்கு உதவி
மேலும் கட்டுமானத்திற்கான நிதியையும் ஏற்பாடு செய்தேன். இந்த விருதை நான் எனது சேவைகளுக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். இதுபோன்ற அங்கீகாரங்கள் இன்னும் கூடுதலாக உதவிகளைச் செய்ய என்னை ஊக்குவிக்கும்" என்றார். திருநங்கைகள் சமூகம் இப்போது தான் மெல்ல ஏற்றுக்கொள்ளத் தொடங்கி உள்ள நிலையில், இந்த விருது அனைத்து திருநங்கைகளுக்கும் ஊக்கமளிக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
-
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட்












Click it and Unblock the Notifications