Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிதாக திருமணம் செய்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.. இனி ஆன்லைனிலேயே திருத்தலாம்- அரசாணை வெளியிட்ட அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை : திருமண சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பெறும் வசதியை அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் இனி திருமண சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இல்லை.

பதிவுத்துறை இணையதள பக்கத்திற்கு சென்று லாகின் செய்து திருமண சான்றிதழில் திருத்தும் மேற்கொள்ளலாம். தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருமண பதிவு

திருமண பதிவு

தமிழ்நாட்டில் திருமண பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டில் திருமண பதிவு விருப்பத்தின் அடிப்படையில் இருந்தது. கடந்த 2009 கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டப்படி, திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் தங்கள் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம். அப்போதுதான் அவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். மேலும், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

 நேரில் செல்ல வேண்டும்

நேரில் செல்ல வேண்டும்

இதுவரை திருமணத்தைப் பதிவு செய்ய அசல் ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. மேலும், திருமண சான்றிதழில் சிறு திருத்தம் செய்ய வேண்டுமானாலும் கூட சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதை மாற்ற வேண்டும். இதனால் நேரவிரயம், அலைச்சல் மட்டுமின்றி, லஞ்சத்திற்கும் அது வழிவகுத்து வந்தது. இடைத்தரகர்கள் பலர் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அதிக தொகை பெற்று வந்தனர்.

ஆன்லைனிலேயே செய்யலாம்

ஆன்லைனிலேயே செய்யலாம்

இந்த நிலையில், திருமண சான்றிதழை இணையதளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் இனி திருமண சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை. https://tnreginet.gov.in/portal என்ற இணையதள பக்கத்திற்கு சென்று லாகின் செய்து திருமண சான்றிதழில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

பொதுமக்கள் வரவேற்பு

பொதுமக்கள் வரவேற்பு


தமிழக அரசின் இந்த அரசாணை காரணமாக இனி திருமண சான்றிதழ் திருத்தங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் நேர விரயமும், அலைச்சலும் தவிர்க்கப்படும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+