கலிகாலம்.. கல்யாண வீடியோ.. வாயோட வாய் வச்சு.. இப்படி செய்யலாமா? கேட்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: மணமகளும் மண மகனும் கை கோர்த்து நடப்பது போல போட்டோவோ, வீடியோவோ எடுப்பது அரிதாக இருந்தது. இன்றைய போட்டோ, வீடியோ சூட் எல்லாமே கற்பனைக்கு எட்டாத வகையில் இருக்கும். குடிப்பது போலவும், புகை பிடிப்பது போலவும் கூட திருமண போட்டோ, வீடியோ எடுக்கின்றனர்.
திருமணம் நிச்சயமான உடன் தனது வருங்கால துணையோடு ஆடி பாடி ப்ரீ மேரேஜ் வெட்டிங் சூட் நடத்துவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே போல திருமணத்திற்கு பிந்தைய போட்டோ, வீடு சூட்டும் விதம் விதமாக உள்ளது. இப்படி போட்டோ, வீடியோ சூட் நடத்துவது சில நேரங்களில் புதுமணத்தம்பதியினரின் உயிருக்கே கூட ஆபத்தாகி விடுகிறது.

பெரும்பாலும் கடற்கரை ரிசார்ட், மலைப்பிரதேசம், புதுச்சேரி, சென்னையை ஒட்டிய கடற்கரைகள் என இடங்களைத் தேர்வு செய்து அங்கு படப்பிடிப்பும், ப்ரீ வெட்டிங் சூட்டிங் நடத்துகின்றனர். மிடில் கிளாஸ் குடும்பங்களின் குறைவான பட்ஜெட்டில் இந்த போட்டோ சூட்டிங் நடத்தினால் வசதி படைத்தவர்களின் கதையே வேறாக இருக்கிறது. இதற்காகவே சில லட்சங்களை செலவு செய்கின்றனர்.

திருமண போட்டோ வீடியோ தயாரிப்பு பேக்கேஜ்களுடன் சேர்த்து ப்ரீ வெட்டிங் சூட்டிங் தொடங்கி ஹனிமூன் பேக்கேஜ் சூட், வளைகாப்பு, குழந்தை பெயரிடுதல் வரை நீடிக்கிறது. இந்த போட்டோ சூட்டிங்கின் போது சொதப்பல் வீடியோ காட்சிகளை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒளிபரப்பும் பழக்கமும், இப்போது டிரெண்ட் ஆகியிருக்கிறது.

மது குடிக்கும் மண மகனுக்கு ஊற்றிக்கொடுக்கும் மணமகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சி ரகமாக உள்ளது. மண மகனின் வாயோட வாய் வச்சு புகையை உறிஞ்சும் மணமகள் எல்லாம் கலிகாலம் என்று பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள். இதற்கு மணமகள் எப்படி ஒத்துக்கொண்டார். கணவனின் ஆரோக்கியம் மட்டுமல்லாது மணமகளுக்கும் ஆரோக்கியம் பாதிக்கப்படுமே என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும்?, தங்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பெரும்பாலும் பெற்றோரைத் தாண்டி மணமக்களே பேசி முடிவு செய்கிறார்கள். அதே போல இந்த திருமணத்திற்கு முந்தைய, திருமணத்திற்கு பிந்தைய போட்டோ சூட் முகம் சுளிக்கும் வகையில் எடுப்பதுதான் வேதனையை தரும் வகையில் உள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications