பாகிஸ்தானில் இந்து கோயில் இடிப்பு... இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொகிதீன் கண்டனம்..!
சென்னை: பாகிஸ்தானில் இந்து கோயில் இடிக்கப்பட்ட நிகழ்வுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையினரின் பெருமையே, தங்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினரைப், பேணிப் பாதுகாப்பதில் தான் இருக்கிறது என்பதை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உணர வேண்டும் என அறிவுரை நல்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பெஷாவர்
பாகிஸ்தானில் பெஷாவர் மாநகரில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கரக் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் உள்ள புராதன இந்து மதக் கோயிலும் அதனை ஒட்டி 1919 முதல் உருவாகிய ஶ்ரீ பரமஹம்ஸ் சாது சேத்திரமும் முஸ்லிம் மத வெறியர்களால் சேதப்படுத்தப்படுள்ள செய்தி மிகுந்த வேதனை தருவாதக இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கோயில் சேதம்
பாகிஸ்தானில் 97 சதவீதம் முஸ்லிம்கள், 3 சதவீதம் மக்களே இந்து, சீக்கிய சிறுபான்மையினர். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்பட்டு, வெளியேற்றப்படுகிறார்கள் என்பதால் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அந்த குற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில் இந்து கோயில் எரிப்பும் சேதமும் அமைந்திருக்கிறது.

சிறுபான்மையினர்
பெரும்பான்மையினரின் பெருமையே, தங்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினரைப், பேணிப் பாதுகாப்பதில் தான் இருக்கிறது என்பதை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உணர வேண்டும். இஸ்லாம் என்பது பிற மதங்களுடன் மோதுவதல்ல; எல்லா மதங்களுடனும் அரவணைத்துச் செல்வதே ஆகும். இதனை இந்து கோயிலை சேதப்படுத்திய வழி தவறிய கூட்டத்தினர் புரிந்துக்கொள்ளவேண்டும்.

பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் அரசு, இந்து கோயிலை சேதப்படுத்தியவர்களைக் கடுமையாகக் கண்டித்ததுடன் 26 பேரைக் கைது செய்திருக்கிறது.இது மிகுந்த வரவேற்புக்குரியதாகும். சேதப்படுத்தப்பட்ட கோயிலை உடனடியாகப் பழுது பார்த்து, புதுப்பித்து இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்கும் நற் காரியத்தை பாகிஸ்தான் அரசு துரிதமாகச் செய்ய வேண்டும்.

கோரிக்கை
1947 ஆகஸ்ட் 15 லிலும் அதற்கு முன்னரும் இருந்து வரும் அனைத்து வணக்கத் தலங்களும், கோயில்களும் மஸ்ஜிதுகளும், சர்ச்சுகளும், பகோடாகளும், குருதுவாராகளும், சினகாகுகளும் பாதுகக்கப்படும் என்று 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறையில் இருந்து வருகிறது. அதைப் போன்ற ஒரு சட்டத்தை பாகிஸ்தான் அரசும் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
இதனிடையே பாகிஸ்தானில் இந்துகோயில் இடிக்கப்பட்ட நிகழ்வுக்கு இந்தியா தனது எதிர்ப்பை ராஜதந்திர முறையில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கோயில் இடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பலரையும் பாகிஸ்தான் அரசு கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications