அதிமுக வழக்கின் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்புலத்தில் பிரதமர் மோடி.. மருது அழகுராஜ் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என சொல்ல எடப்பாடி தரப்பினருக்கு உரிமை இல்லை, நாங்கள் அதிமுக கொடியை சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி கட்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் எத்தனையோ சட்ட போராட்டங்களை எடுத்தும் அது பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கே சாதகமாக போனது.

அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் அளித்த மனுவையும் மீறி எடப்பாடியை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்கீகரித்தது, அத்துடன் இரட்டை இலை சின்னமும் அவருக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும் அதிமுகவின் பெயரையும் கொடியையும் ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி தரப்பின் மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் திருச்சியில் நாளை ஓபிஎஸ் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தனக்கு இருக்கும் செல்வாக்கை எடப்பாடி தரப்பினருக்கு நிரூபிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அதிமுகவினரின் கொடியை சற்று வித்தியாசமான முறையில் பயன்படுத்தியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் கூறுகையில் நாங்கள்தான் உண்மையான அதிமுக. தேர்தல் ஆணையம் எடப்பாடியை அதிமுக பொதுச் செயலாளராக அறிவித்தது கர்நாடகா தேர்தலுக்காக மட்டும்தான். இன்னமும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்களை அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என அவர்கள் சொல்ல முடியாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் சட்டரீதியாக சந்திக்க தயார் என்றார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் ஓபிஎஸ் அணியின் மாநில செய்தித் தொடர்பாளருமான மருது அழகுராஜ், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் அதிமுகவின் அதிபர் எடப்பாடி பழனிசாமிதான் என எந்த உரிமையும் இன்னும் அவருக்கு தரவில்லை. அதிமுக கொடியை சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம். யாரும் கேட்க முடியாது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு பின்புலமாக பிரதமர் இருக்கிறார். விசாரணையின் போது எடப்பாடிக்கு எதிராக கேள்விகளை கேட்டும் நீதிபதிகள் தீர்ப்பின் போது மட்டும் எடப்பாடிக்கு தேவையான நேரத்தில் தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்னவென்று குழப்பமாக இருக்கிறது. இவ்வாறு மருது அழகுராஜ் தெரிவித்தார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications