Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காம்ரேடுகள் ரெடி..தமிழ்நாடே திணறப்போகுது! மத்திய அரசு,ஆளுநர்களை கண்டித்து இன்று சிபிஎம் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

மாநில உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர்கள் மூலம் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதில் கூட்டணி கட்சியினரும் திரளாக கலந்துகொள்ள உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Marxist Communist protest across Tamil Nadu today condemning the Union government and governors

முன்னதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "ஒன்றிய பாஜக மோடி அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜக அல்லாத எதிர்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் நிதிப் பகிர்வு உள்ளிட்ட பல அம்சங்களில் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மாநிலங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க மறுப்பதுடன், மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கும் தடை விதிப்பது, அரசியல் சாசன சட்ட விழுமியங்களை காலில் போட்டு மிதிப்பது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது போன்ற நாசகர வேலைகளில் ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.

குறிப்பாக, தமிழகம், கேரளம், மேற்குவங்கம், பஞ்சாப், புதுதில்லி உள்ளிட்டு பல மாநிலங்களில் ஆளுநரை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை செயல்பட விடாமல் முடக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு தொடுத்து வரும் தாக்குதலுக்கு எதிராகவும், கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் வருகிற 2024 பிப்ரவரி 8ந் தேதி அன்று புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக அரசாங்கத்தின் சார்பாக முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது. தமிழகத்திலும் மாநில உரிமைகள் பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து பிப்ரவரி 8, 2024 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிபிஐ (எம்) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாநில, மாவட்ட தலைவர்கள், தோழமைக் கட்சியினர் திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக சக்திகளும் பேராதரவு தந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது." என்று குறிப்பிட்டு இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+