அன்புள்ள மோடி ஜி... தடுப்பூசி விவகாரத்தில் இதைச் செய்யுங்கள்... டி.கே.ரங்கராஜன் யோசனை கூறி கடிதம்..!
சென்னை: கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளில் செங்கல்பட்டில் இயங்கும் இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தையும் ஈடுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
அதன் விவரம் பின்வருமாறு;

அன்புள்ள திரு நரேந்திர மோடி ஜி ,
''நம் நாட்டில் இன்று நிலவிவரும் கடுமையான கோவிட் தொற்று குறித்து தாங்கள் அறிவீர்கள். இதை தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரிக்கவும் கிடைக்கும் இடங்களில் இருந்து எல்லாம் தடுப்பூசி வாங்கிடவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த வைரஸ் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் ஒரு குறிப்பிட்ட காலம் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். இந்த தடுப்பூசியை மக்கள் மூன்றாவது தவணையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.''
''இந்த தடுப்பூசியை நமது நாட்டிலேயே தயாரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் தாங்கள் உடன் படுவீர்கள் என்று கருதுகிறேன். இந்த பிரம்மாண்டமான பணியில் மேலே குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமல்லாது ஏனைய நான்கு பொதுத்துறை தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களும் ஈடுபடுத்த படவில்லை என்பது வருத்தம் அளிக்க செய்கிறது.''
''கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தங்களை நேரில் சந்தித்து செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து, இந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொண்டேன்.''
''சமீபத்தில், ஜனவரி 8-ஆம் தேதி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் திரு.ஹர்ஷ் வர்தன் இந்த தொழிற்சாலையை பார்வையிட்டபோது நானும் அங்கு சென்று அவரை சந்தித்தேன். தொழிற்சாலையை முழுமையாக பார்வையிட்ட அமைச்சர் , உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டு இருப்பதை கண்டார் . இந்த தொழிற்சாலைக்கு தேவையான நிதியை தருவதாக வாக்குறுதி அளித்தார் .''
''அன்புள்ள ஐயா, கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் பிரம்மாண்டமான பணியினை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் மேற்கொள்ளத்தக்க வகையில் அவற்றின் உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன். இதுதான் மிகப் பிரதானமான கடமை என்றும் கருதுகிறேன். இந்த சூழ்நிலையில் செங்கற்பட்டு நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தக்க அனைத்து திறனையும் பெற்றுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தங்களுக்கு உள்ள கடுமையான பணிகளுக்கு மத்தியில் இந்த விஷயத்திலும் தாங்கள் கவனத்தை செலுத்தி செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட உதவிட வேண்டுகிறேன்''.
இவ்வாறு டி.கே.ரங்கராஜன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications