ED - பாஜக டீலிங்.. தலித் நிலங்கள் அபகரிப்பு! கட்சியில் இத்தனை குற்றவாளிகளா? கொந்தளித்த மார்க்சிஸ்ட்
சென்னை: சேலம் மாவட்டத்தில் ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்துள்ள மாவட்ட பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் கிராமம், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த முதியவர்களும், ஏழை விவசாயிகளுமான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோரின் 6 1/2 ஏக்கர் நிலத்தை தனது பெயரில் மாற்றி போலி பத்திரம் செய்த பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கொலை - நில அபகரிப்பு போன்ற கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியுமான குணசேகரன் என்பவரை உடனடியாக கைது செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

சேலம் மாவட்ட பாஜக பொறுப்பாளர் குணசேகரன் என்பவர் வயதான ஏழை விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோரின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க முற்பட்ட போது அவர்கள் விற்பதற்கு முன்வராததால் காவல்துறை, வருவாய்த்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளின் துணையோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தனது பெயருக்கு போலி பத்திரம் செய்துள்ளார். விவசாயிகளையும் தங்களின் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத வகையில் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியும் உள்ளார்.
இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டும் தனது பாஜக அரசியல் பின்னணியையும், கிரிமினல் குற்ற பின்னணியையும் பயன்படுத்திக் கொண்டு நடவடிக்கை எடுக்காத வகையில் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இவர்களது நிலத்தை அபகரித்தது போல் இப்பகுதியில் ஏராளமான விவசாயிகளின் நிலங்களையும் அபகரித்துள்ளது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிபறிப்பு, போதைப் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு என பல்வேறு குற்ற பின்னணிகளை கொண்டவர்கள் பாஜக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் கூட தனது சொந்த கட்சிக்காரான நடிகை கௌதமியின் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பாஜகவினரே அபகரித்தது நாடறியும். இதுபோன்று தமிழகம் முழுவதும் ஒன்றிய ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி பாஜகவினர் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்துள்ள சேலம் பாஜக மாவட்ட பொறுப்பாளர் குணசேகரனை நில அபகரிப்பு சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உடன் கைது செய்திடவும், இவருக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறை, வருவாய்த்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்து உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு இவரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு திரும்ப வழங்கிடவும், கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், சேலம் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது.
பிஜேபியால் அமலாக்கத்துறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதிலும் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, பட்டியல் சாதியை சார்ந்த விவசாயிகளின் நிலத்தை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ள குணசேகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications