சாதியை நிறுவ முயலும் பாஜக.. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கு எதிராக சதி! கே.பாலகிருஷ்ணன் கொதிப்பு
சென்னை: உயர்கல்வித்துறையில் இடஒதுக்கீட்டுப் பணியிடங்கள் நிரப்பப்படாவிட்டால் அவற்றை பொதுப்பிரிவுக்கு வழங்கலாம் என்ற யுஜிசியின் வரைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "உயர்கல்வி பணியிடங்களில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டுவதா? பாஜக அரசின் போக்கிற்கு சி.பி.ஐ(எம்) கண்டனம். ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமலாக வேண்டும் என ஆண்டாண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால், ஒன்றிய அரசின் உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களில் அனைத்திலும் எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இட ஒதுக்கீட்டுகளுக்குமொத்தமாக முடிவுகட்டும் விதமான வரைவினை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது.

இது கடுமையான கண்டனத்திற்குரியது. எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இட ஒதுக்கீட்டு காலியிடங்களை அதே பிரிவினரை கொண்டு நிரப்ப சிறப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பல ஆண்டுகளால வாதிட்டு வருகிறோம். ஆனால், சில ஆண்டுகள் முன் ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டும் ஒரு பரிந்துறை அரசிற்கு தரப்பட்டது. அப்போது சி.பி.ஐ.எம் அதனை நிராகரிக்க வேண்டுமென வற்புறுத்தியது.
ஆனால் விஷமத்தனமாக அமைதி காத்த பாஜக அரசு, நேரம் பார்த்து புதிய தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த வரைவின் மீது கருத்துக் கோருவதே தவறானது, முற்றாக திரும்பப்பெற்றிட வேண்டும். எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி இட ஒதுக்கீடு நடப்பில் இருக்கும்போதே மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சாதி ஆதிக்க போக்கு வெளிப்படுவதை பார்க்கிறோம். இப்போது உள்ள இடஒதுக்கீடும் பறிக்கப்பட்டால் கல்வி நிறுவனங்கள் சிதைந்து சமூக நீதி கெடுக்கப்படும். மேலும் இந்த தாக்குதல் பிற துறைகளிலும் முன்னெடுக்க உதாரணம் உருவாகும்.
நாட்டின் கோடிக்கணக்கான எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி இளைஞர் / இளம் பெண்களின் சமூக பாதுகாப்பான வேலை உரிமையை பறித்து, சாதி அநீதியை நிலைநாட்ட முயற்சிக்கும் பாஜகவின் இந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியதாகும். எதிர்ப்புகளை தொடர்ந்து கல்வி அமைச்சகம் கொடுத்திருக்கும் விளக்கம் போதுமானதல்ல. பல்கலைக்கழக மாநியக் குழுவின் இந்த முயற்சியே மொத்தமாக ரத்து செய்யப்பட்டு வரைவு திரும்பப் பெறப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு உரிமைப்படி காலிப் பணியிடங்களை உடன் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.ஐ.எம் சார்பில் வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார். கடும் எதிர்ப்பை தொடர்ந்து இதற்கு யுஜிசியின் இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications