"போட்றா வெடிய".. அரசு பஸ்களில் இலவச பயணம்.. யாருக்குன்னு பாருங்க.. உடனே அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பஸ் பயணம் அறிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, போக்குவரத்துத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டில் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.

அமைச்சர் சிவசங்கரன்

அமைச்சர் சிவசங்கரன்

ஏற்கனவே 3 வயது வரை உள்ள குழந்தைகள், பஸ்களில் கட்டணம் இல்லாமல் இலவசமாகவே பயணித்து வருகிறார்கள். 4-12 வயதுடையவர்களுக்கு மட்டும் அரை டிக்கெட் வழங்கப்படுகிறது... அதற்கு பிறகுதான், அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கரன், 5 வயது வரை குழந்தைகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் பயணிக்கலாம் என்று அறிவித்தார்.. இது தொடர்பாக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அப்போது வெளியிட்டிருந்தது.

அரைக்கட்டணம்

அரைக்கட்டணம்

அதில், "கடந்த மே 5ஆம் தேதி போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையின்போது, 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் பெறுவதற்குப் பதிலாக, இனிவரும் காலங்களில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டணம் எதும் பெறப்படமாட்டாது" என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது... 5 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக்கட்டணம் வசூலிக்கலாம் என உரிய முறையில் திருத்தங்கள் செய்யப்படும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசு

தமிழக அரசு

இந்நிலையில், அமைச்சர் அறிவிப்பினையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்துவகை பேருந்துகளிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது... மேலும் அது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

அரசு பேருந்தில் குழந்தைகளுக்கு இலவச பயணம் தொடர்பாக, அனைத்து மாவட்ட மேலாண் இயக்குனர்களுக்கு போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கோபால் அனுப்பியுள்ள கடிதத்தில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+