ஒரே சிரிப்புதான்.. மஞ்சள் புடவையுடன் மாஸ் என்ட்ரி தந்த கிருத்திகா.. பின்னாடியே வந்த உதயநிதி.. வாவ்
கிருத்திகா உதயநிதி மஞ்சள் நிற புடவையுடன் இன்று வருகை தந்திருந்தார்
சென்னை: இன்று முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழா என்றாலும், விழாவில் உதயநிதியின் குடும்பம்தான் மொத்த அரங்கையும் ஈர்க்க வைத்து விட்டது.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் - பாகம் 1 சுயசரிதை நூல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்று வருகிறது..
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிற இந்த நூல் வெளியீட்டு விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார்.

பினராயி விஜயன்
இந்த விழாவில், சிறப்பு விருந்தினரான காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.. இந்த நூலை ராகுல்காந்தி வெளியிட, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பெற்றுக்கொள்கின்றனர். விழாவில், கேரள முதல்வர் பினராய் விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அரங்கம்
இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அனைவருமே பங்கேற்றுள்ளனர்.. திமுக தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,எம்பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நடிகர்கள், இலக்கிய பிரமுகர்கள், விஐபிக்கள், என அனைவருமே 3 மணிக்கு முன்னதாகவே அரங்கில் குழுமிவிட்டனர்.. இதற்கு பிறகு, மஞ்சள் நிற பட்டுப்புடவையுடன் உதயநிதியின் மனைவி கிருத்திகா மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தார்.. அவருடன் அவரது மகன், மகள் ஆகியோரும் வந்திருந்தனர்,.

கிருத்திகா ஸ்டாலின்
முன்வரிசையில் உட்கார்ந்திருந்த நடிகர் பிரபு மற்றும் முக்கிய தலைவர்களுக்கு கிருத்திகா கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.. பிறகு பின்னாடியே உதயநிதி ஸ்டாலின் வந்தார்.. அவரும் அங்கு உட்கார்ந்திருந்த மூத்த தலைவர்களுக்கு வணக்கம் சொல்லி கொண்டே போனார்.. விழா துவங்குவதற்கு முன்பு, ராஜேஷ் வைத்யாவின் வீணை கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

உதயநிதி பாடல்
"ஓ ரசிக்கும் சீமானே" என்று பராசக்தி பாடல்களை ஆரம்பத்தில் வீணையில் வாசித்தாலும், பிறகு உதயநிதி ஸ்டாலினின் பாடல்களுக்கு வந்துவிட்டனர்.. பெரும்பாலும் உதயநிதி பாடல்களே வீணையில் வாசிக்கப்பட்டது.. சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில். உன்ன நினைச்சு ... நினைச்சு பாடலை வீணையில் வாசிக்க, அரங்கே அதை கேட்டு ரசித்து கொண்டிருந்தது..!
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications