இது லிஸ்ட்லேயே இல்லையே.. ஸ்டாலினையே திரும்பி பார்க்க வைத்த "பாமக ஸ்டாலின்".. ஆடுதுறை ட்விஸ்ட்
ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் பாமக வெற்றி பெற்றுள்ளது
சென்னை: பாமகவில் இருந்து திமுக கூட்டணிக்கு இன்றைய தினம் ஒரு ஷாக் தரப்பட்டுள்ளது.. இந்த சம்பவம்தான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்து முடிந்தது.. அதன் வாக்குகளும் பிப்ரவரி 22ம் தேதியே வெளியானது.
வெற்றி பெற்ற நகரமன்ற உறுப்பினர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்று கொண்டனர்... பேரூராட்சி தலைவர், நகர்மன்ற தலைவர்கள், மேயர், ஆகியோர் 4ம் தேதி மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திமுக கூட்டணி
ஆனால், சில இடங்களில் மட்டும் பிரச்சனையாகிவிட்டது.. உட்கட்சி பூசல், கூட்டணி உரசல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு போன்றவைகள் எழுந்தன.. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது திமுக உறுப்பினர் கடத்தப்பட்டதாக கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர்.. அதாவது, ஆடுதுறை பேரூராட்சியில் கடந்த 4ம் தேதி தலைவர் தேர்தல் நடந்தபோது திமுக கவுன்சிலர்கள் 3 பேர் வராத நிலையில், தேர்தல் நடத்துவதாக செயல் அலுவலர் இளவரசன் சொன்னார்..

விண்ணப்பங்கள்
உடனே, தேர்தல் நடத்தக்கூடாது என்று மதிமுக, திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தேர்தலுக்கான விண்ணப்பங்களை கிழித்துவிட்டனர். இதனால், இங்கு மட்டும் தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.. இதனிடையே, தேர்தலை நடத்தக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் கவுன்சிலர்கள் சிலரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி, இன்றைய தினம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆடுதுறை பேரூராட்சியில் தேர்தல் கும்பகோணம் கோட்டாட்சியர் கண்காணிப்பில் தேர்தல் நடந்து முடிந்தது..

7 பேர் வரவில்லை
ஆனால், காலை 10.30 மணி வரையும் திமுக, மதிமுக உறுப்பினர்கள் என 7 பேருமே வராததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது... அதிமுக, பாமக, சுயேட்சை உறுப்பினர்கள் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர்... ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் திமுக, மதிமுக உள்ளிட்ட 7 பேர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், பாமக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு ம.க.ஸ்டாலின் வேட்பு மனு அளித்திருந்த நிலையில், பேரூராட்சி தலைவராக போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவர் பதவி தற்போது நடந்து வருகிறது.

ஹைலைட்
இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், திமுக கூட்டணியில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவி இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.. ஆனால், எதிர்பாராத விதமாக பாமக இடத்தை கைப்பற்றி விட்டது, பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த தேர்தலில் திமுக, மதிமுக உறுப்பினர்கள் என 7 பேருமே எதற்காக வரவில்லை என்பது தெரியவில்லை.. ஆனால் பாமக தரப்பு குஷியில் உள்ளது..!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications