“ஸ்டன்” ஆன எல்.முருகன்! ஸ்டாலின் பேரை சொன்னவுடன்.. மோடியின் சென்னை நிகழ்ச்சியில் அதிர்ந்த அரங்கம்
சென்னை: பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ள புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை உச்சரித்த உடனே அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிக சத்தத்தில் கரகோஷங்களை எழுப்ப பேச்சையே சில நொடிகள் நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.
தென் மாநிலங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தெலுங்கானாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின் சென்னை வந்து இருக்கிறார். சென்னை விமான நிலைய புதிய முனையம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அவர் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து சென்னை பல்லாரத்தில் நடைபெறும் புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நெஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு, அமைச்சர் தாமொ அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். அதில் தொடக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார்.
அப்போது, "மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை மத்திய அரசுடன் இணைந்து சீரும் சிறப்புமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிற நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே.." என்று சொன்னவுடன் கூட்டத்தில் இருந்து கரகோஷக்குரல்கள் எழுந்தன. சில நொடிகள் நீடித்த இந்த கரகோசத்தை அமைதியாக பார்த்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனால் சில நொடிகள் நிறுத்திவிட்டு உரையை தொடர்ந்தார் எல்.முருகன்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே என்று அவருக்கு வரவேற்பு கொடுத்தார். "சகோதரர்களே! சகோதரிகளே! இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் சென்னை ரூ.1,260 கோடிக்கான விமான நிலைய திட்டத்தையும், வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் கொடுத்து, இன்னும் பல திட்டங்களையும் கொடுத்துக் கொண்டு இருக்கிற பிரதமர் எப்போதும் தமிழ்நாட்டின்மீது மிகப்பெரிய பாசத்தையும் அன்பையும் வைத்து உள்ளார். எனவேதான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான திட்டங்களை கொடுத்து உள்ளார்." என்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications