சென்னையின் அடையாளமே மாறுது.. மந்தைவெளி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் வரும் பிரம்மாண்டம்
சென்னை : சென்னை மெட்ரோ நிறுவனம் வெறும் மெட்ரோ ரயில்களை இயக்கும் நிறுவனம் மட்டுமல்ல, அந்நிறுவனம் தனக்கு வழங்கப்பட்ட சொத்துக்களை மிகப்பெரிய வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விடும் நிறுவனமாகவும் இருக்கிறது. சென்னை மெட்ரோ நிறுவனம் சென்னையின் உள்ள மதிப்புமிக்க இடங்களில் எல்லாம் வணிக வளாகங்களை கட்ட முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மந்தைவெளி பேருந்து பணிமனை மிகப்பெரிய வணிக வளாகமாக அமைகிறது.. சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ நிலையங்களில், வணிக வளாகமாக மாறுகிறது. அதற்கான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), தற்போதைய மந்தைவெளி மாநகரப் போக்குவரத்து கழகத்தின் (MTC) பணிமனை மற்றும் பேருந்து நிலையத்தில், சொத்து மேம்பாட்டுக் கட்டிடங்களை வடிவமைத்து கட்டுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது சென்னையின் நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.

இந்தத் திட்டம், தற்போது நடைபெற்று வரும் மந்தைவெளி சுரங்கப்பாதை மெட்ரோ நிலையம் மற்றும் மந்தைவெளி மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளுடன் தடையின்றி இணைக்கப்பட்டு ஒரு முழுமையான ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
பரப்பளவு: இக்கட்டுமானம் மொத்தம் 29,385 சதுர மீட்டர்
அமைப்பு: இது கோபுரம் A மற்றும் கோபுரம் B என இரண்டு கட்டிடங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கட்டிடமும் 2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்கள் என்ற அமைப்பில் கட்டப்படும்.
வசதிகள்: இங்கு பேருந்துகளில் பயணிகள் ஏறி இறக்குவதற்கான வசதிகள் , வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக இடங்கள் ஆகியவை இடம்பெறும். இது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு, நகர்ப்புற பயன்பாட்டையும் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம், Bridge and Roof நிறுவனத்திற்கு ரூ.167.08 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், "சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ நிலையங்களில், வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ நிலையங்களில், வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை வடிவமைத்து கட்டுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நிலையான மற்றும் போக்குவரத்து சார்ந்த நகர வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பயணிகள் மெட்ரோ நிலையத்தை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதிலும் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
இப்பணியானது கட்டுமானப் பணிகள், கட்டிடக் கலை வேலைகள் மற்றும் கட்டுமான தொடர்புடைய அனைத்துப் பணிகளுடன், போக்குவரத்து சார்ந்த பிரத்யேக சொத்து மேம்பாட்டையும் உள்ளடக்கியது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
துரைப்பாக்கம்: இங்கு 3 அடித்தளங்கள் (Basements), தரைத்தளம் மற்றும் 5 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது.
சோழிங்கநல்லூர்: இங்கு அடித்தளம் மற்றும் 8 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது.
தனிச்சிறப்பு: வழித்தடம்-3 மற்றும் வழித்தடம்-5 இடையிலான இணைப்புப் பாதை உடன் சோழிங்கநல்லூர் வணிகக் கட்டிடத்தின் வழியாகச் செல்வது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும். இதன் மூலம் வணிக வளாகத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு நேரடியாக செல்ல முடியும்.
இந்தக் கட்டுமானப் பணிகள் மெட்ரோ பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு பயணக்கட்டணம் அல்லாத வருவாயை கணிசமாக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம், Bridge and Roof நிறுவனத்திற்கு ரூ.268.80 கோடி (GST உட்பட) மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof நிறுவனத்தின் பொது மேலாளர் (தெற்கு) திரு. டி. ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திரு. டி. லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டாக்டர் டி. ஜெபசெல்வின் க்ளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல் மற்றும் மேலாண்மை), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டம் நிறைவு பெற்றவுடன், சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் ஆகிய இரண்டு நிலையங்களிலும் தடையற்ற நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகள், மெட்ரோ பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த வணிகக் கட்டமைப்புகள் ஆகியவை வழங்கப்படும். வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் பாதையில் (IT Corridor), ஒருங்கிணைந்த போக்குவரத்து, போக்குவரத்து சார்ந்த மேம்பாடு மற்றும் நிலையான நகர வளர்ச்சி ஆகியவற்றிற்கான சென்னை மெட்ரோ நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்தத் திட்டம் மேலும் வலுப்படுத்துகிறது" இவ்வாறு சென்னை மெட்ரோ கூறியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications