'ஒன் இந்தியா தமிழில்' வெளியான எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதைக் கருதான் மாஸ்டர் கதையா? வெடித்த சர்ச்சை
சென்னை: 'ஒன்இந்தியா தமிழில்' வெளியான, எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கதையின் கருதான் மாஸ்டர் படத்தின் கதையா என்ற கேள்விகள் ரசிகர்களால் முன்வைக்கப்படுகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா, சாந்தனு உள்ளிட்டோர் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகியுள்ளது 'மாஸ்டர்' திரைப்படம். இந்த திரைப்படத்தின் மையக் கரு என்பது, சிறார் காப்பகங்களில் உள்ள சிறுவர்களை வைத்து கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவது. இதே மையக் கருதான், ஒன்+ஒன் =ஜீரோ கதையிலும் இடம் பெற்றிருந்தது. பிரபல கிரைம் திரில்லர் நாவல் எழுத்தாளர் ராஜேஷ் குமார், நமது 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட்டில் இந்த கதையை தொடர்ந்து எழுதி வந்திருந்தார்.

ராஜேஷ்குமாரின் நாவல்களை தழுவி அல்லது மையக் கருவை வைத்து அவரது அனுமதியை கூட பெறாமல் படங்கள் வருவது தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. தமிழ் இயக்குநர்களின் சிந்தனை திறன் குறைந்து விட்டதா, கற்பனை வளம் மங்கிவிட்டதா என்ற கேள்விகளை எழுப்புகிறது இதுபோன்ற சம்பவங்கள்.
ராஜேஷ் குமார் கதைக் கருவை வைத்து 2 வருடங்கள் முன்பு வெளியான மற்றொரு படம், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்த "திருமிரு பிடிச்சவன்" இந்த திரைப்படத்தை இயக்கியது கணேசா.
ஒரு படைப்பாளியின் படைப்பை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது சட்டப்படியும், தார்மீகப்படியும் தவறானது என்று எழுத்துலகில் உள்ள பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
தமிழ் சினிமா பிரபலங்கள் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'சர்கார்' திரைப்படத்தின் கதைக் கரு, வருண் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்றும், செங்கோல் என்ற பெயரில் அவர் பதிவு செய்து வைத்த கதைக் கருதான் சர்கார் திரைப்படத்தின் கதைக் கரு என்றும் சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றது. இறுதியில், கதைக் கரு, ஒரே மாதிரி இருப்பதை முருகதாஸ் ஒப்புக்கொண்டு, சர்கார் திரைப்படத்தின் ஆரம்பத்தில், வருண் ராஜேந்திரனின் பெயரை திரைப்படத்தில் இடம்பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications