டீல் ஓகே?.. ஸ்டாலினுக்கு "மெசேஜ்" தந்த மம்தா.. ஒரே கல்லில் டபுள் மாங்காய் அடித்து.. கவனிக்கும் பாஜக
முதல்வர் ஸ்டாலினை மம்தா பானர்ஜி எதற்காக சந்தித்து பேசினார்
சென்னை: முதல்வர் ஸ்டாலினை, மம்தா பானர்ஜி சந்தித்து விட்டு போனதன் அரசியல் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை.. இது தொடர்பாக சில யூகங்களும், சந்தேகங்களும் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
காங்கிரசுடன் இணக்கமான உறவை கொண்டிருந்த மம்தா பானர்ஜி, சோனியா காந்தியை கடந்த ஆண்டு முதல் சந்திப்பதை தவிர்க்க தொடங்கினார்..
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எங்கே உள்ளது? என்று கேள்வியெழுப்பி காங்கிரஸை கிண்டலடித்தார். நடுநடுவே, ராகுலையும் சாடினார்.

பிரதமர் வேட்பாளர்
ஒருவேளை பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க முற்படுவதை பிடிக்காமல்தான், மம்தா இவ்வாறு காங்கிரஸ் மீதான வெறுப்பை காட்டுகிறார் என்றே அன்று கணிக்கப்பட்டது.. ஆனால், அவரது பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடே மாற்றம் காண துவங்கியது.. பாஜக எதிர்ப்பு என்ற அலைவரிசையில் நின்றவர், தற்போது, அந்த நிலைப்பாட்டில் மம்தா சற்று தளர்ந்திருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது..

பிக் சான்ஸ்
மற்றொருபக்கம், வரப்போகும் எம்பி தேர்தலுக்கு, பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒன்று திரண்டு வரும் சூழலில், அதிலும், சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கி உள்ள மெகா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் பெயரில் ஸ்டாலின் பெயரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.. ஸ்டாலினை போன்றவர்கள், பிரதமராக இருந்தால் நாடு செழிக்கும் என டெல்லியில் உள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவரும் எண்ணத் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் கசிந்து வரும் நிலையில்தான், மம்தா பானர்ஜி சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.

இல.கணேசன்
ஆளுநரை திரும்ப பெற கோருவதில் திமுக அரசு வேகமும், வீர்யமும் காட்டி வரும் சூழலில்தான், மம்தா பானர்ஜி, ஸ்டாலினை சந்தித்து பேசியது மிகந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவும் பார்க்கப்படுகிறது.. இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வந்தவர், முதல்வரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.. அரசியல் எதுவும் பேசவில்லை என்று முதல்வரும், மம்தாவும் சொன்னாலும்கூட, இந்த சந்திப்பில் அரசியல் நிகழ்ந்திருக்கும் என்றே பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.

டீல் ஓகே?
முதல்வர் ஸ்டாலினை மம்தா பானர்ஜி சந்தித்து பேச காரணம் என்ன என்பது குறித்து ஒருசில யூகங்கள் வட்டமடித்து வருகின்றன.. இல.கணேசன் விழாவில் மட்டுமே பங்கேற்றால், பாஜகவுடன் தான் இணங்கி போகிறோம் என்பதை வெளிப்படையாக பேசப்பட்டுவிடுவோம் என்பதற்காகவே, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கக்கூடிய, ஸ்டாலினையும் சந்தித்து பேசியதாக சிலர் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, பாஜகவுக்கு எதிராக அணி குறித்து மம்தா சில விஷயங்களை பேசியதாகவும், ஆனால், எதற்கும் பிடி கொடுக்காமல், எம்பி தேர்தலில் இணைவோம் என்று மட்டுமே கூறி, பட்டும் படாமல் பேசி ஸ்டாலின் நழுவி கொண்டதாகவும் சிலர் சொல்கிறார்கள்..

கேம் சேஞ்ச்
இப்படிப்பட்ட சூழலில், ஒரு தனியார் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் மம்தா எதற்காக முதல்வரை சந்திக்கக்கூடும் என்பதில், தன் சந்தேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.. மணி சொல்லும்போது, "2024-ல் மோடிக்கு மாற்று வேட்பாளர் என்று பேசப்பட்ட மம்தா பானர்ஜி, தன்னுடைய சட்டசபையிலேயே மோடி நல்லவர், வல்லவர் என்று பேசியதை யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஆர்எஸ்எஸ்ல் உள்ளவர்கள் எல்லாருமே கெட்டவர்கள் இல்லை என்றும் சொன்னார். இவ்வளவும் பேசிவிட்டு, நேராக இல.கணேசன் விட்டிற்கு வருகிறார் என்றால், ஏற்கனவே இருந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி உள்ளார் என்றே அர்த்தமாகிறது..

கொஞ்சி குலாவல்
பொதுவாக ஒரு தலைவர்களை சந்திப்பது என்பது சாதாரண விஷயம்தான்.. ஆனால், இல.கணேசன் வீட்டிற்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது.. தன் மாநிலத்தின் எதிர்க்கட்சியால் வதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, அரசியல்ரீதியான சித்ரவதைக்குள்ளாகி, இன்று அவர்களிடமே கொஞ்சி குலாவுகிறார்கள் என்றால், அதன்அர்த்தம் என்ன? அந்த எதிர்க்கட்சி, பாஜகவிடம் அடிபணிந்துவிட்டது என்பதே இதன் அர்த்தம்.. மம்தா ஏன் இப்படி இறங்கி போகிறார்? பாஜக எதிர்ப்பில் அவர் ஏன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்? என்பதைதான் கவனிக்க வேண்டும்..

சமிக்ஞைகள்
ஒருவேளை, பாஜகவிடமிருந்து ஏதாவது ஒரு செய்தியை, ஸ்டாலினுக்கு கொண்டு வந்திருக்கலாம்.. ஏதோ சில சமிக்ஞையை பாஜகவிடமிருந்து கொண்டு வந்திருக்கலாம்.. அது நாகரீகமான அரசியல் செய்தியாக இருக்கலாம்.. மம்தாவின் வருகை, 2 விதமான மெசேஜ்களை தருகிறது.. ஒன்று, பாஜகவுக்கு எதிரான அணியில் தான் இடம்பெற மாட்டேன் என்று மோடிக்கு தரக்கூடிய மெசேஜ்ஜாக இருக்கலாம்... இத்தனை நாளும் எதிர்ப்பை காட்டிய நிலையில், இதை பாஜக ரசிக்கவே செய்யும்.

டேஞ்சர்
மற்றொன்று, ஸ்டாலின், காங்கிரசுடன் போகாமல், நடுநிலைமை தன்மையை எடுக்க வலியுறுத்தியும் இருக்கலாம்.. ஆனால், ஸ்டாலினை பொறுத்தவரை, பாஜக எதிர்ப்பில் எப்போதுமே உறுதியாக இருக்கிறார்.. அதில் இருந்து அவர் பின்வாங்கவே மாட்டார்.. பாஜகவை வீழ்த்துவதற்காக உருவாக்கப்படும் எதிரணியில்தான் நிச்சயம் அங்கம் வகிப்பார்.. அப்படிப்பட்ட பாஜகவுக்கு எதிரணிக்கு, தலைமை தாங்கி நடத்துபவர் ஸ்டாலினாகத்தான் இருப்பார்.. எனினும் மம்தாவின் சென்னை வருகை, அரசியல் கலந்த நிகழ்வு என்பதை மறுக்க முடியாது" என்கிறார் திட்டவட்டமாக.
-
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ












Click it and Unblock the Notifications