நான்தான் சொல்றேனே.. ஆஹா.. அன்னபூரணி சாமியார் சொல்றது உண்மையாய்டுமா!
சென்னை மூழ்கும் என்று அன்னபூரணி சாமியார் சொன்னது நடக்குமா?
Recommended Video

சென்னை: "நான்தான் சொல்றேனே... சென்னைக்கு ஆபத்து வரப்போகுது..ன்னு" என்று அன்னபூரணி சாமியாரின் பேட்டி வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு அருகே சின்னாளம்பாடி என்ற கிராமத்தில் இயங்கி வரும் பிரம்ம பீடத்தில் இருப்பவர்தான் பெண் சாமியார் மாதா அன்னபூரணி. இவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில் "கலைஞர் கருணாநிதி.. கரிகால சோழனின் புனர் ஜென்மம் என்றர். அதேபோல, ஜெயலலிதா வைணவ குருவான ராமானுஜரின் சீடர்களில் ஒருவராக இருந்தவரது மறுபிறவி" என்று சொன்னார். இப்படி தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களை பற்றி இந்த சாமியார் சொன்னதும், அந்த நேர்காணல் நிகழ்ச்சி மிகவும் வைரலானது.

அன்னபூரணி சாமியார்
அந்த நிகழ்ச்சியிலேயே சென்னைக்கு வரப்போகும் மழை, புயலை பற்றி அடித்து சொல்லி இருந்தார் அன்னபூரணி. அவரது அந்த மழை குறித்த பேச்சுதான் தற்போது வைரலாகி வருகிறது. அன்னபூரணி சாமியார் சொன்னதாவது:

நிலநடுக்கங்கள்
"நான் இதுக்கு முன்னாடி சொன்ன மாதிரியே எல்லாமே நடந்து விட்டது. இப்போதும் சொல்கிறேன் சென்னைக்கு ஆபத்து வரப்போகிறது. இதை நான் 3 வருஷங்களாக சொல்லிட்டு வருகிறேன். நிலநடுக்கங்கள் வரும், தண்ணியில அழிவு வரும்.

எச்சரிக்கை வேண்டும்
1959-ல் ஒரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போ மொத்த கிராமமே அழிந்துவிட்டது. அதுபோலே திரும்பவும் வரும் என்பதுதான் சித்தர்கள், ஞானிகள், மகான்கள், குருமார்களை பூஜை செய்தபோது என்னிடம் சொன்னார்கள். அதனாலதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலகுக்கு சொல்கிறேன். இப்படி ஒரு சூழ்நிலை வருவதற்கு முன்னாடியே மனுஷர்கள் ஜாக்கிரதையாக இருந்துக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

நீரால்தான் நமக்கு அழிவு
சென்னையில் கட்டாயம் ஒரு பகுதி அழியக்கூடிய சூழல் வரும். இதற்கு பிறகு உலக அளவில் ஒரு பெரிய சுனாமி வரப்போகுது. இது நிச்சயம் உண்டாகும். சுனாமி மொத்தமாவே வரப்போகுது. நீரால்தான் நமக்கு அழிவு. தண்ணியிலதான் நமக்கு அழிவு." இப்படி அடித்து பேசியிருக்கிறார் அன்னபூரணி சாமியார்.

நாலா பக்கமும் அணை
ஒரு பக்கம் வானிலை ஆராய்ச்சி மையம், அடுத்தடுத்து புயல்கள் வரப்போகுது என்கிறார்கள். மற்றொரு பக்கம் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் செல்வகுமார் இன்னும் 7 புயல் பாக்கி இருக்கு என்கிறார். இன்னொரு பக்கம் தமிழகமே வெள்ளத்தில் மூழ்க போகுது என்று புயல் ராமச்சந்திரன் பஞ்சாங்கம் கணித்து சொல்கிறார். இப்போது தண்ணியில நமக்கு அழிவுன்னு ஜாக்கெட் போடாத சாமியார் அன்னபூரணி சொல்றார். இப்படி நாலா பக்கமும் அணை கட்டினா நாம எங்கதான் போறது?
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications