பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. தமிழக முதலமைச்சரின் திட்டம்.. இன்றே கடைசி நாள்
சென்னை: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வுத் தொகை கிடைக்காத பயனாளிகள் வரும் அக்டோபர் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,.
1992ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.25,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 வழங்கக்கப்படும். இந்தத் தொகை மொத்தமாக, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரட்டப்பட்ட வட்டி விகிதத்துடன், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும்.
சமூக நலன்துறையால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெற்ற திட்டங்களில் ஒன்று. இன்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் மக்கள், முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இணைவது அதிகமாகவே உள்ளது. ஆதார் எண்ணை இணைத்து பெண் குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.
பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.
இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்கள் கண்டிப்பாக ஆதார் எண் இருக்க வேண்டும்.
தமிழக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் 1997 முதல் 2001-ம் ஆண்டு வரை பதிவு செய்து, 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இத்திட்டத்தில் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள், உரிய ஆவணங்களான, வைப்புநிதிப்பத்திரம் அசல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் வங்கிக்கணக்கு புத்தகம் நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) புகைப்படம் ஆகியவைகளுடன், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம், வருகின்ற 25-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications