மே.4 சம்பவம் இருக்கு.. என்ன தவெக ஆட்சியை பிடிக்கப்போகுதா! அதான் இல்லை.. த்ரிஷா பர்த்டே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிக்கிறது. அதன்படி, ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மே.4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் மே.4ம் தேதி த்ரிஷா பிறந்த தினம் என்பது குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சோஷியல் மீடியாக்களில் பழைய வீடியோக்கள் வருவது ஒன்னும் லேசுபட்ட விஷயம் கிடையாது. அதிலும் ட்விட்டர் எனும் x தளத்தில் பழைய வீடியோ வருகிறது எனில், அன்றைக்கு அரசியல் தலைவர் எவரோ வசமாக சிக்கியிருக்கிறார் என்று அர்த்தம். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர த்ரிஷாவின் பழைய வீடியோ ஒன்று ட்விட்டர் முழுவதும் தீயாய் பரவியது.

Trisha

என்ன வீடியோ அது?

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டியின் வீடியோ அது. "நான் முதலமைச்சர் ஆகவேண்டும். இதுதான் என்னுடைய ஆசை" என த்ரிஷா சொல்ல.. பேட்டியெடுத்தவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர். இருப்பினும் விடாத த்ரிஷா.. தன்னுடைய ஆசையில் அவர் உறுதியாக இருப்பதாக கூறியிருந்தார். அந்த வீடியோ சுத்தலில் வர காரணம், திருமண விழாவுக்கு அவர் சென்றிருந்ததுதான் என்று பேசப்பட்டது.

ஆசைகள் பொதுவானவை

ஆசைகள் பொதுவானதுதானே! த்ரிஷாவுக்கும் இப்படியான ஆசைகள் வருவதில் ஆச்சரியம் இல்லையே! என்று பலரும், பல கோணங்களில் சமாளிக்க.. அப்போதைக்கு அந்த விவகாரம் ஒரு வழியாக பத்தோடு, பதினொன்றாக கரைந்தது.

தேர்தல் முடிவும்.. த்ரிஷா பிறந்த நாளும்

இப்படி இருக்கையில் மீண்டும் த்ரிஷாவின் வீடியோக்கள் சில, சோஷியல் மீடியாக்களில் இன்று சுற்றலில் வருகின்றன. விசாரித்ததில், மே.4ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது என்கிற விஷயத்தை மேற்கோளிட்டனர். அப்படியெனில் த்ரிஷாவின் பிறந்த தினமும், தேர்தல் முடிவும் ஒரே நாளில் வருகிறது என்பதுதான் விஷயம்.

ஆட்சியா? படுதோல்வியா?

த்ரிஷா மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்ற அரசியல் கட்சி, வெற்றிப் பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா? அல்லது படுதோல்வியை தழுவி.. அரசியல் களத்திலிருந்து கழற்றிவிடப்படுமா? எனபது அவரது பிறந்த நாளில் தெரிந்துவிடும் என நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள். அப்படியெனில் நிச்சயம் மே.4ம் தேதி த்ரிஷாவின் வாழ்க்கையில் முக்கியமான தினம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என, நெட்டிசன்கள் கமென்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே! மே.4ம் தேதி உங்களுக்கும் பிறந்த நாள் வருகிறதா? நீங்கள் விரும்பும் கட்சி அன்று ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? கமென்ட் செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+