மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
சென்னை: மாயாவதி நிறுத்தி உள்ள வேட்பாளர்களால் பாஜக எளிதாக 24 தொகுதிகளில் வெற்றிவாகைசூடும் எனக் கணிப்புகள் கூறுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில், ஆக மொத்தமாக 89 தொகுதிகளில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
கேரளா (20 தொகுதிகள்), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (08), அசாம் (05), சத்தீஸ்கர் (03), கர்நாடகம் (14), உத்தரப் பிரதேசம் (08), மத்திய பிரதேசம் (07), பீகார் (05), மேற்கு வங்கம் (03), மணிப்பூர் (01), திரிபுரா (01), ஜம்மு காஷ்மீர் (01) என மொத்தம் 89 தொகுதிகளுக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்தத் தொகுதிகளில் பாஜக அதிகம் பலம் வாய்ந்த மாநிலமாக உபி உள்ளது. இந்தியாவிலேயே அதிக தொகுதிகளைக் கொண்டுள்ள உபியை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்களே மத்தியில் ஆளும் கட்சியே வருவார்கள் என ஒரு பேச்சு உள்ளது.
ஆகவே, அனைவரது கண்களும் உபி மீதுதான் உள்ளது.
உபியில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. அதற்கு அடுத்ததாக மிகப் பெரிய மாநிலக் கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. அதன் தலைவராக அகிலேஷ் யாதவ் இருக்கிறார்.
இந்த உபி யாதவும் பீகார் யாதவும் (தேஜஸ்வி யாதவ்) சேர்ந்துதான் நாட்டின் தலையெழுத்தையே இந்த முறை நிர்ணயிக்க உள்ளனர் என்று சொல்கிறார்கள்.
அதற்கு ஏற்ப தேஜஸ்வி, பீகாரிலுள்ள காந்தி மைதானத்தில் நடத்திய பொதுக்கூட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆளும் கட்சியான பாஜகவின் செல்வாக்கை அசைத்து பார்ப்பதாக அது அமைந்தது.
அதனைத் தொடர்ந்து உபியில் பிரியங்கா காந்தி நடத்திய ரோடு ஷோ மிகப் பெரிய அளவில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாக அமைந்துள்ளது என்கிறார்கள். கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இந்த ரோடு ஷோவில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த 6 லட்சம் பேரில் ராஜ்புத் சமூகத்தினர்தான் அதிகம் என்கிறார்கள். காங்கிரஸ், அகிலேஷ் யாதவ் என ஒரு கூட்டணி இந்த முறை உபி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜகவின் செல்வாக்கை சரிக்கும் என்கிறார்கள்.
இதுவரை உபி தேர்தல் களத்தில் வேகம் எடுக்காத இருந்த மாயாவதி இப்போது பேசுபொருளாக மாறி உள்ளார். அதற்குக் காரணம், பகுஜன்சமாஜ் கட்சி மாயாவதி லேசாக மோடியை விமர்சிக்கத் தொடங்கி உள்ளார்.
ஒரு பக்கம் பாஜகவுக்கு ஆதரவாக தனது வேட்பாளர்களை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதிக்கு எதிராக களம் இறங்க செய்துவிட்டு, இன்னொரு பக்கம் மோடி ஆட்சி வராது என்று பேசத் தொடங்கி உள்ளார்.
இவரது நிலைப்பாட்டால் பாஜக 24 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உண்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒரு காலத்தில் தலித்துகளின் கட்சியாக பார்க்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, மாநிலத்தின் உயர்சாதி மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு உயர்ந்தது என்பது வரலாறு.
ஆனால், அதிகார துஷ்பிரயோகம், விதிமுறை மீறல் என்று படிப்படியாக செல்வாக்கை இழந்த மாயாவதி இப்போது தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி மிகப்பெரிய அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக இல்லை.
அதற்கு வயது ஒரு முக்கிய காரணம். அவரது அண்ணன் மகன் ஆகாஷ் ஆனந்த் இப்போது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக செயல்படத் தொடங்கி உள்ளார். இதுவரை பாஜகவின் பி டீம் என்றே பகுஜன் சமாஜ் கட்சியை அகிலேஷ் மற்றும் காங்கிரஸ் உட்பட பலரும் கூறி வருகிறார்கள்.

மாயாவதி தனித்து நிற்பதால், அது மோடிக்கு ஆதரவாகவே இருக்கும் என்றே பலரும் கூறுகிறார்கள். அதற்காக விளக்கத்தை மாயாவதியின் அண்ணன் மகன் ஆகாஷ் ஆனந்த் இப்போது தெரிவித்திருக்கிறார்.
“பிரதமர் நரேந்திர மோடியையோ அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையோ அப்படி இல்லை என்றால் மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்தையோ நாம் தாக்கினால், பதிலுக்கு அவர்கள் நேரடியாக தாக்கமாட்டார்கள்.
அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறையை விட்டோ அல்லது சிபிஐயை விட்டோ தாக்குவார்கள். அந்தத் தாக்குதலை தாங்கும் சக்தி பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு இல்லை. அவர்களை எதிர்த்து நம் தலித் மக்களால் போராட முடியாது" என்று கூறியுள்ளார்.
மாயாவதியின் அரசியல் வாரிசான அண்ணன் மகன் ஆகாஷ் ஆனந்த்தான் இப்படி பேட்டிக் கொடுத்துள்ளார். ஆனால், இதற்கு மாறாக மாயாவதி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? மோடி மீண்டும் பிரதமராக வருவது கஷ்டம் என்கிறார்.

உபியைப் பொறுத்தவரை மத அரசியல் தலைத்தூக்கி உள்ள மாநிலம். இங்கே தலித் வாக்கு 22% உள்ளது. அடுத்ததாக பிசி 44% உள்ளனர். முஸ்லிம் 19% உள்ளனர்.
இந்த மாநிலத்தில் உயர்சாதியான தாக்கூர் சமூகம் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது. பிராமணர்களும் அப்படித்தான். பிராமணர்கள் 19% உள்ளனர். கிழக்கு உபியில் இவர்கள் ஆதிக்க செலுத்தக் கூடிய சமூகமாக உள்ளனர்.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியோ யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குவங்கியை நம்பிதான் உள்ளது. பாஜக வழக்கமாக பிராமணர்கள் மற்றும் தாக்கூர் சமூக மக்களை நம்பியே உள்ளது.
இப்படியான நிலையில்தான் பகுஜன் சமாஜ் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் 64 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அதில் 14 வேட்பாளர்கள் பிசி. தலித்துகள் 14 பேர். முஸ்லிம் வேட்பாளர்கள் 18 பேர். உயர்ஜாதியினர் 18 பேர். இந்த உயர்சாதி வேட்பாளர்களில் 10 பேர் பிராமணர்கள். 5 பேர் உயர்சாதியான தாக்கூர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications