"இது சங்கீத திருநாளோ" விஜய் பாடலுக்கு உயிர் சேர்த்த அந்த குரல்! மனதை வருடிய பவதாரிணியின் பாடல்கள்
சென்னை: பவதாரிணியின் குரல் மிகவும் தனித்துவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறுவதுண்டு. 2000 ஆம் ஆண்டில் பவதாரிணிக்கு தேசிய விருது மயில் போல பொண்ணு ஒன்னு... கிளி போல பேச்சு ஒன்னு என்ற பாடலுக்கு கிடைத்தது. இதேபோல் விஜயின் காதலுக்கு மரியாதை படத்திலும் இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே புற்று நோயால் பாதித்து இருந்த பவாதாரிணி, அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்று இருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இலங்கையில் தற்போது உயிரிழந்துள்ளார். பவதாரணி உடல் நாளை மாலை சென்னை கொண்டு வர உள்ளனர். குயில் போன்ற குரல் கொண்ட பவதாரிணி மனதை வருடும் பல பாடல்களை பாடியுள்ளார்.

பவதாரிணியின் குரல் மிகவும் தனித்துவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறுவதுண்டு. 2000 ஆம் ஆண்டில் பவதாரணிக்கு தேசிய விருது இந்த பாடலுக்கு கிடைத்தது. இந்த பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் மனம் லயித்து போகும். அந்த அளவுக்கு தனது ரம்மியமான குரலை ரசிகர்களை கட்டிப்போட்டு இருப்பார். பவதாரிணியின் பாடலைக் கேட்டு லயித்து போக வைக்கும் அளவுக்கு மென்மையாக அவரது குரல் ஒலிக்கும்.
அதிக பாடல்கள் பாடாமல் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலேயே பவாதாரிணி பாடியிருந்தாலும், பல பாடல்களை இப்போதும் பலர் முனுமுனுத்துக் கொண்டு இருப்பதை காண முடியும். பவதாரணியோட குரல் ரொம்பவே தனித்தன்மையானது. அவர் பாடல்களெல்லாம் நம்மை அப்படியே லயிக்க வைக்கும். அவரின் குரல் மனதின் ஓரத்தில் எங்கேயோ ஒளிந்திருந்து அப்பப்போ நமக்கே தெரியாமல் முணுமுணுப்பாக வந்துவிட்டுப் போகும்.
ஆனால், அவர் நிறைய பாடல்கள் பாடவே இல்லை என்பது வருத்தமே. மிகக்குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பாடல்களையே பாடியுள்ளார். தாமிரபரணி படத்தில் உள்ள தாலியே தேவையில்லை பாடலை ஹரிஹரனுடன் இணைந்து பவதாரிணி பாடியிருப்பார். எப். எம்கள் ஆதிக்கம் இருந்த காலத்தில் இந்த பாடல் ஒலிபரப்பு செய்யப்படாத இடமே இலலை என்ற அளவுக்கு பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.
அனேகன் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஆத்தாடி ஆத்தாடி பாடலில் அவ்வளவு ரசனையோடு பாடியிருப்பார் பவதாரிணி.. இந்த பாடல் இன்று வரை பலரது ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல 'அழகி' படத்தில் இளையராஜா இசையில் பவதாரிணி பாடிய 'ஒளியிலே தெரிவது தேவதையா' என்ற பாடலை ரசிக்காதவேரே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
யூடியூப்களில் அதிகம் கேட்கப்படும் பாடலாக இந்த பாடல் தற்போதும் இருக்கிறது. இதேபோல் நடிகர் விஜயின், காதலுக்கு மரியாதை ப்ரண்ட்ஸ் போன்ற படங்களிலும் பவதாரிணி பாடல்கள் பாடியுள்ளார். குறிப்பாக "இது சங்கீத திருநாளோ" என காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினி பாடுவது போல் வரும் பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவியது. அந்த பாடலுக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்.












Click it and Unblock the Notifications