மேயர் பிரியாவை "உரசிய" ரங்கநாதன்.. பிரியா வீட்டில என்ன நினைப்பாங்க? முதல்வருக்கு காளியம்மாள் கோரிக்கை
சென்னை: திமுகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், திமுகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி, நாம் தமிழர் கட்சியே போராட்டத்தில் இறங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் கூறியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தீரன் சின்னமலை நினைவு தினத்தில், சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா, திமுக முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வீடியோ: அப்போது நிகழ்ச்சியில், மேயர் பிரியாவை உரசிக்கொண்டும், கையை பிடித்து இழுத்தும் அவமதிக்கும் விதமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் நடந்து கொண்டதாக பகீர் கிளம்பி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.
மேயர் பிரியாவை, தனக்கு அருகில் நிற்க வைக்க ரங்கநாதன் முயல்வதும், ஆனால், அவரது செயலை விரும்பாத மேயர் பிரியா, கையை தட்டிவிட்டதும், முகசுளிப்புடன் பிரியாவின் முகம் காணப்பட்டதும் அதில் பதிவாகி இருந்தது.
கண்டனங்கள்: இதற்குதான் கண்டனங்கள் கிளம்பி உள்ளன. சென்னை மாநகராட்சியின் வணக்கத்துக்குரிய மேயர் பிரியா, தலித் சமூகத்தை சேர்ந்தவர்.. அவரை அவமதிக்கும் விதமாகவே, திமுகவின் மாஜி எம்எல்ஏ இப்படி நடந்து கொண்டதற்கு, இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை? குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காமல் இருக்கிறார்களே? என்று ஆதங்க கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறப்பு வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளர். அந்த வீடியோவில் காளியம்மாள் பேசியிருப்பதாவது :
"அந்த விழாவில் மேயர் பிரியா நேராகத்தான் நின்னுட்டு இருக்காங்க.. அங்கே எந்த கூட்டமோ, நெரிசலோ காணப்படவில்லை.. அந்த நேரத்தில், ரங்கநாதன், மேயரின் கையை பிடித்து இழுக்கிறார். உடனே மேயர், முகசுழிப்புடன் அவரது கையை தட்டிவிடுகிறார் என்பதை அந்த காணொலியில் பார்க்க நேரிடுகிறது.
வணக்கத்திற்குரிய மேயர்: மேயராக இருக்கக்கூடியவர், அதுவும் சென்னையில் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய என்பதற்கு பதிலாக வணக்கத்திற்குரிய என்று திமுகவின் பிரதிநிதிகளே சொல்லும் அளவுக்கு, மேயர் பதவி அவருக்கு தரப்பட்டுள்ளது.. தாழ்த்தப்பட்ட, பெண்ணுக்கு வாய்ப்பு தந்துள்ளோம்.. ஒடுக்கப்பட்ட பெண்ணை மேயர் பதவியை நாங்கள் தந்திருக்கிறோம், நாங்கள் சமூகநீதியை கற்பிக்கிறோம் என்று திமுக அப்போதே பறைசாற்றிக் கொண்டது.
ஆனால், தொடர்ந்து அந்த மேயருக்கு பாலியல் சீண்டல் நடந்து வருகிறது என்ற விஷயமாகத்தான் இந்த காணொலியும் பார்க்கப்படுகிறது. இதுதான் முதல்முறையா என்றால் கிடையாது.. இதே சட்டமன்ற உறுப்பினரால், இதற்கு முன்பு ஈரோடு இடைத்தேர்தலின்போதும் ஒரு சம்பவம் நடந்தது.
ஈரோடு இடைத்தேர்தல்: ஒரு பெண் ஓடி ஓடிவாக்கு அப்போது சேகரித்து கொண்டிருந்தார். இளமையான வயது என்பதால், அந்த பெண் சுறுசுறுப்பாக ஓடி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போதும் அந்த இடத்த்ல், எந்த கூட்ட நெரிசலும் அங்கு இல்லை. உடனே ரங்கநாதன், அந்த பெண்ணின் தோள் பட்டையை வைத்து திருப்புகிறார்.
மகளாகவே இருந்தாலும் அல்லது பேத்தி வயதுடைய பெண்ணாகவே இருந்தாலும்கூட, மதிப்புமிக்க ஒரு பொறுப்பில் உள்ள பெண்ணை இப்படி செய்யலாமா? இப்படி பேசுங்கள், அப்படி பேசுங்கள் என்று வாய்மூலமாகவே சொல்லாமல், மரியாதைக்குரிய கேஎன் நேரு அவர்கள் அன்று மேயர் பிரியாவை பேசியதே பெரிய விமர்சனத்துக்குள்ளானது.
தொட்டு தொட்டு பேசி: அந்த நிகழ்வுக்கு அவரே விளக்கமும் தந்திருந்தார். அப்படியிருக்கும்போது, மேயரை தொட்டு திருப்புவதும், அவரது கையை பிடித்து இழுப்பதுமான ரங்கநாதன் செய்து வருகிறார். இதை பெரிதாக பேசக்கூடிய பிரச்சனையாக மாற்றாமல், மேயரும் இதை கடந்து சென்றுவிட்டார்.
ஆனால், அவரது குடும்பத்தில் உள்ளவர்களும், அவரது கணவரும், உண்மையிலேயே திமுக பற்றி என்னதான் நினைப்பாங்க? திமுகவில் பெண் பிரதிநிதிகளுக்கு மதிப்பு இல்லையோ? அல்லது ஒடுக்கப்பட்ட பெண்ணை இப்படி நடத்தினால், சம்பந்தப்பட்ட பெண்கள், கண்டும் கணாமல் போய்விடுவார்கள் என்று ரங்கநாதன் போன்றோர் நினைத்து கொண்டிருக்கிறார்களா? தெரியவில்லை.
பிரியாவின் கணவர்: பிரியாவின் தாத்தா, இந்த திமுகவுக்காக உழைத்தவர். 2 முறை எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார்.. பிரியாவின் அப்பாவும் மாவட்ட பொறுப்பில் உள்ளார். கணவரும் திமுகவிலேயே முக்கிய பொறுப்பில் உள்ளார். ஆனால், மேயர் பிரியா எப்படி நடத்தப்படுகிறார்? பிரியாவின் வயதை விடுங்க.. அவருக்கு வழங்கப்பட்ட பதவிக்கு இப்படித்தான் செய்வதா? செய்தியாளர் கூட்டத்திலும், இப்படிதான் பேசணும், இதைதான் சொல்லணும் என்று மேயரிடம் திணிப்பதா?
திமுகவில் பல்வேறு தளங்களில் இப்படித்தான் இருக்கிறார்கள். பெண்ணியத்தை பாதுகாப்பதற்காகத்தான் கட்சியையே நடத்தகிறோம் என்று சொல்லக்கூடிய கட்சியிலேயே இப்படி நடக்கிறது.
பெரிய பெரிய பெண்கள் அமைப்புகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன? மீ டூ என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் எந்த பெண்கள் அமைப்புமே பேசவில்லை.. காரணம், இது ஆளும் கட்சி பிரச்சனை என்று நினைக்கிறார்கள்..
திமுகவே இதை பெரிதாக எடுத்துக்கவில்லையே என்று கடந்து ஒதுங்கி செல்கிறார்கள்.
ரங்கநாதன்: முதல்வர் முன்னாடியே இப்படி ரங்கநாதன் செய்கிறார் என்றால், அந்த பெண்ணை எந்த மாதிரியான கண்ணோட்டத்தில் ரங்கநாதன் பார்த்திருப்பார்? மேயர் என்றில்லை, திமுகவின் மகளிர் அமைப்பில் உள்ளவர்களையே எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களை, ஒரு அரசு கண்டும் காணாமல் போகுமானால், அந்த அரசு நிர்மூலமாகிவிடும். இதற்கு தமிழகமே ஒரு சாட்சி.. அன்று அதிமுக ஆட்சியை இழந்ததும், இதே பெண்களின் பாலியல் தொந்தரவும், பாலியல் வழக்குகளில் கிடைக்காத நீதியினாலும்தான்..
போராட்டம்: அதேசரிவைதான் திமுகவும் சந்திக்கும். பொதுமக்களால் மட்டுமல்ல, திமுகவில் உள்ள பெண் நிர்வாகிகளியாலேயே அந்த கட்சி நிச்சயம் சரியும்.. முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும், குறிப்பாக, திமுகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், திமுகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி, நாம் தமிழர் கட்சியே போராட்டத்தில் இறங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று காளியம்மாள் ஆவேசமாக கூறியிருக்கிறார்.
-
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications