சென்னை பட்ஜெட்டில் அடுத்த லெவல் அறிவிப்பு.. பள்ளி மாணவர்களுக்கு மாலையில் "ஸ்நாக்ஸ்..": மேயர் பிரியா
சென்னை: சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் 'ஸ்நாக்ஸ்' வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
2023 - 24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா.
பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்கு தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று போட்டி தேர்வில் வென்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களுக்கு முதலாமாண்டு கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சியே செலுத்தும் என அறிவித்தார். ஜேஇஇ, க்ளேட், நீட் போன்ற போட்டி தேர்வுகளில் வென்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடியில் கட்டமைய்ப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பில் ஆய்வகம் மேம்படுத்தப்படும். சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை அதிகரிக்க பள்ளிகளில் மாதிரி ஐநா சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது. சென்னை மாநகர்ச்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications