தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான மசகான் டாக் லிமிடெட் (MDL) தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் திட்டமிட்டிருந்த பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் மெகா கப்பல் கட்டும் தளத்தை கைவிட்டு, ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் முதலீடு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசின் அலட்சியப் போக்கு, பல முறை முயன்று தமிழக அரசு ஆர்வம் காட்டாமல் இருந்தது, வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளே இந்த முடிவுக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் தொழில் துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025 செப்டம்பர் 19 அன்று பவநகரில் நடைபெற்ற மத்திய அரசின் 'சமுத்திர சே சம்ரித்தி' மாநாட்டில், தமிழக அரசின் 'கைடன்ஸ் தமிழ்நாடு' நிறுவனத்துடன் MDL முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டது.

vijay tvk andhra pradesh

தூத்துக்குடியில் 1,050 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன கிரீன்ஃபீல்ட் கப்பல் கட்டும் தளத்தை உருவாக்க MDL திட்டமிட்டிருந்தது. இதற்காக ரூ.15,000 முதல் ரூ.18,000 கோடி வரை முதலீடு செய்ய MDL வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்தது. அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் முழுமையாக மேம்படுத்தப்படும் இந்தத் தளம், 3,00,000 DWT திறன் கொண்ட மிகப் பெரிய VLCC (Very Large Crude Carrier) கப்பல்களை தயாரிக்கும் திறனுடன் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தத் திட்டம் இந்தியாவின் 'மரைடைம் அம்ரித் கால் விஷன் 2047' தொலைநோக்கு திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு (Indigenisation) முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்லாயிரம் கோடி ரூபாய் மானியங்களை வழங்கவிருந்தன. ஆனால், தமிழக அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைச்சகம் (MoPSW) 2025 டிசம்பர் 26 அன்றுதான் 'கப்பல் கட்டும் மேம்பாட்டுத் திட்ட வழிகாட்டுதல்களை' வெளியிட்டது. ஆனால், அதற்கு 19 நாட்களுக்கு முன்பே, 2025 டிசம்பர் 7 அன்று மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தென்கொரியாவின் HD Hyundai நிறுவனத்துடன் தமிழக அரசு பிரத்யேக ஒப்பந்தம் செய்தது. மேலும், 'NSHIP TN' (தேசிய கப்பல் கட்டுதல் மற்றும் கனரக தொழில்துறை பூங்கா, தமிழ்நாடு) 2026 ஜனவரியில்தான் பதிவு செய்யப்பட்டது. எந்த ஏல நடைமுறையும் இல்லாமல், விதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பே வெளிநாட்டு நிறுவனத்தை 'அங்கர் இன்வெஸ்டர்' என தேர்வு செய்தது எப்படி என கேள்விகள் எழுந்துள்ளன.

உள்நாட்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கு போட்டி வாய்ப்பு அளிக்காமல், வெளிநாட்டு நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக புகார்கள் குவிந்தன. இதனால் ஏமாற்றமடைந்த MDL, தூத்துக்குடி திட்டத்தை கைவிட்டு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி திரும்பியுள்ளது. ஆந்திராவில் மெகா கப்பல் கட்டும் கிளஸ்டரில் அங்கர் இன்வெஸ்டராக இணைய MDL விருப்பம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் திட்டமிட்டதை விட பெரிய அளவில் ரூ.29,000 கோடிக்கும் அதிக முதலீட்டை ஆந்திராவில் செய்ய MDL தயாராகி வருகிறது. ஆண்டுக்கு 1.2 மில்லியன் டன் கப்பல் கட்டும் திறனை உருவாக்கும் சாத்தியக்கூறு ஆய்வுக்கு MDL குழு விரைவில் ஆந்திரா செல்லவுள்ளது.

தூத்துக்குடியின் இயற்கையான துறைமுக வசதிகள், குறைந்த உவர்ப்பு, சர்வதேச கப்பல் பாதைகளுக்கு அருகாமை ஆகியவை இந்த தளத்தை இந்தியாவின் முதன்மை இடமாக்கின. ஆனால், தமிழக அரசின் செயல்பாடுகளால் இப்போது இந்த வாய்ப்பு அண்டை மாநிலத்துக்கு செல்லும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் தமிழக இளைஞர்களுக்கு உருவாகவிருந்த பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பணம் மற்றும் மானியங்கள் ஈடுபடும் மூலோபாய திட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்களை புறக்கணித்து வெளிநாட்டு நிறுவனத்தை முன்னிறுத்தியது ஏன் என்பதற்கு தமிழக அரசு இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. இந்த சர்ச்சை தொடர்ந்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தின் தொழில் முதலீட்டு சூழல் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+