அள்ளிக்கிட்டு போச்சு ஆந்திரா.. மீண்டும் கோட்டை விட்ட விஜய் 7 கோ! மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் எஸ்கேப்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் தமிழகத்திற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருக்கிறது ஆந்திர அரசு. தமிழகத்தில் சுமார் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் ஆந்திராவை நோக்கி நகர இருப்பதாக சொல்லப்படுகிறது. தூத்துக்குடியில் நிலம் ஒதுக்கீடு தொடர்பாக தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தினர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பல்வேறு நிறுவனங்கள் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம் என தமிழக வெற்றிக் கழக அரசு சொல்லி வருகிறது.

Mazagon Dock Shipbuilders

இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் ஆந்திராவை நோக்கி நகர இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுமார் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இதற்காக தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் இந்த நிறுவனம் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத்தில் வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தூத்துக்குடியில் நேரடியாகவும் அதனைச் சார்ந்த தொழில்கள் மூலமாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகி இருந்தது.

ஆந்திரா முதலீடு

ஆனால் தற்போது இந்த திட்டம் பின்னடைவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது திட்டத்திற்கு தேவையான நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட சில முக்கிய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தின் முதலீடு தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லலாம் என தகவல்கள் கடந்த சில நாட்களாக உலாவி வருகின்றன. இந்த கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் முக்கியமான ஒரு மீட்டிங் நடந்திருக்கிறது.

சந்திரபாபு நாயுடு

இந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சந்தித்து பேசி இருக்கின்றனர். இந்த சந்திப்பில் ஆந்திராவில் கப்பல் கட்டும் துறை மற்றும் கடல் சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு ஆந்திராவுக்கு செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது.

தொழில் வளர்ச்சி

தூத்துக்குடியை பொறுத்தவரை கடல் சார்ந்த வர்த்தகம் துறைமுகம் முக்கிய தொழில்களாக இருக்கிறது. அங்கு மட்டும் கப்பல் கட்டும் தளம் அமைந்தால் கப்பல் கட்டுமானம் மற்றுமின்றி உதிரிபாக தயாரிப்பு, பராமரிப்பு, கடல்சார் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி இருக்கும். 15 ஆயிரம் கோடி முதலீடு என்பது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்திருக்கும்.

தமிழக தொழில்துறை

இந்த நிலையில் இந்த திட்டம் ஆந்திராவுக்கு செல்வதாக வெளியாகி உள்ள தகவல் தமிழக தொழில்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த திட்டம் முழுமையாக கைவிடப்பட்டதாக மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆந்திர முதலமைச்சருடனான சந்திப்பை மட்டும் வைத்து முதலீடு சென்று விட்டதாக சொல்ல முடியாது எனவும், அதே நேரத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்கின்றனர் தொழில் துறையினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+