Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களே கவனம்! எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு! எப்போது தொடங்குகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் இப்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ இடங்கள் நீட் தேர்வின் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் மாணவ, மாணவியர் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

 MBBS and BDS counseling to start from July 22 medical counseling 2023

அதன்படி இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், இப்போது அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு குறித்து சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கலந்தாய்வு: அதன்படி அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ இடங்களில் சேர 40,193 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்குகிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலமும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்கள் மூலமாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகில இந்திய ஒதுக்கீடு மூலம், அரசு நிகர்நிலை, மத்தியப் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் நிறுவனங்களில் சேரலாம். இந்த அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வரும் ஜூலை 20 முதல் விண்ணப்பிக்கலாம். என்று மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 22 முதல் மாணவ, மாணவிகளே இடங்களைத் தேர்வு செய்யலாம். அதே நாளில் மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீடு: ஜூலை 22 முதல் 26 வரை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இடங்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்ற நிலையில், தொடர்ந்து மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை ஜூலை 27, 28 தேதிகளில் நடக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து ஜூலை 29ஆம் தேதி கலந்தாய்வு முடிவுகள் அறிவிக்கப்படும்..

மேலும், ஜூலை 30ஆம் தேதிக்குள் தேசிய மருத்துவ கலந்தாய்வுக் குழுவின் இணையதளத்தில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கலந்தாய்வுகள் நடக்க உள்ளது.

மாநில ஒதுக்கீடு: அதேபோல மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் அதே ஜூலை 22இல் தொடங்குகிறது. இது மாணவர் சேர்க்கை குழு மூலம் நடத்தப்படுகிறது. பொதுவாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு முடிந்த பிறகு மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் நடக்கும். ஆனால், இந்த முறை போதிய கால அவகாசம் இல்லாததால் ஒரே நாளில் இரண்டு கலந்தாய்வும் நடக்கிறது.

மாநில ஒதுக்கீட்டிற்கான பட்டியலை வரும் 16இல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறார். ஜூலை 22இல் கலந்தாய்வு தொடங்கும் நிலையில், தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5050 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவமனையில் 150 இடங்களும், 2 பல் மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களைத் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+