சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங் 2020 விண்ணப்பம் தொடங்கியது - 16 ல் தரவரிசை பட்டியல்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் 12ம் தேதி வரை tnmedicalselection.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்து கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

ஆண்டு தோறும் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று மே மாதம் முடிவுகள் வெளியாகும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் மாதம்தான் முடிவுகள் வெளியிடப்பட்டன. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியானது.

MBBS, BDS Counseling 2020 Application Launched - Ranking List at 16

இந்த நிலையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் 12ம் தேதி வரை tnmedicalselection.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு இன்று அறிவித்துள்ளது. இதனையடுத்து ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்
7.5% இட உள் ஒதுக்கீடு மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு தேர்தெடுக்கப்படும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் 16ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு, 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக ஜூன் மாதத்தில் நடக்க வேண்டிய கலந்தாய்வு தாமதமாக நடைபெறுவதாகவும் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 1,052 இடங்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
It has been announced that students who want to participate in the consultation for MBBS and BDS courses in Tamil Nadu can apply online at tnmedicalselection.org from today till the 12th. Following this, online application registration has started to participate in the next consultation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X