மனசெல்லாம் பிள்ளைகள் ஞாபகம்! கனடாவுக்கு பறந்த துரை வைகோ! பின்னணி இது தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தனது பிள்ளைகளை பார்ப்பதற்காக கனடா சென்றுள்ளார்.

துரை வைகோவின் மகனும், மகளும் கடனாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

தலைக்கு மேல் கட்சிப் பணிகள் காத்திருக்கும் சூழலில் பிள்ளைகளுக்காக ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு கனடா நாட்டுக்கு சென்றிருக்கிறார் துரை வைகோ.

துரை வைகோ

துரை வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு காரணமாக அவரால் முன்பை போல் ஆக்டிவாக இயங்க முடியவில்லை. மேடைப் பேச்சுக்களின் போதும் தனது டோன் டெசிபலை மிகவும் குறைத்துக்கொண்டார். இந்நிலையில் அவரது இடத்தில் நின்று மதிமுக தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ தான் கட்சிப் பணிகளில் பம்பரமாக சுழன்று வருகிறார்.

கனடாவில் பிள்ளைகள்

கனடாவில் பிள்ளைகள்

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவர் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வருகை தருவதில்லை. இது குறித்து நாம் விசாரித்ததில் தான் அவர் கனடாவுக்கு சென்றிருக்கும் தகவல் கிடைத்தது. துரை வைகோவின் மகள் கனடாவில் டாக்டருக்கு படித்து முடித்திருக்கிறாராம். அதற்கான பட்டமளிப்பு விழாவில் ஒரு தந்தையாக கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் கட்சிப் பணிகளுக்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்துவிட்டு அங்கு சென்றாராம் துரை வைகோ.

கட்சிப் பணி

கட்சிப் பணி

இதேபோல் துரை வைகோவின் மகனும் கனடாவில் தான் கல்லூரி படித்து வருகிறார். பிள்ளைகள் இருவரையும் பார்ப்பதற்காகவும் அவர்களுடன் சில நாட்கள் செலவிடுவதற்காகவும் துரை வைகோ கனடா விசிட் அடித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் தமிழகம் திரும்பும் துரை வைகோ, அதன் பிறகு விடுபட்ட கட்சிப் பணிகளை விறுவிறுவென செய்து முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாயகம்

தாயகம்

மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் துரை வைகோவுக்கு ஏற்கனவே தனி அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறை இன்னும் புதுப் பொலிவுடன் புதுபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். சென்னையில் இருந்தால் தினமும் 5 மணி நேரமாவது துரை வைகோ கட்சி அலுவலகத்தில்ீருப்பார் என்பது கூடுதல் தகவலாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+