போராட்டம், விசுவாசம், துரோகம், சேனாதிபதி! மல்லை சத்யாவின் ஈஸ்டர் தின செய்தியால் பரபரக்கும் மதிமுக
சென்னை: மதிமுகவில் துரை வைகோ- மல்லை சத்யா இடையே மோதல் போக்கு காணப்பட்டு வரும் நிலையில் ஈஸ்டர் தின செய்தியில் நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது என மல்லை சத்யா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மல்லை சத்யா தனது ஈஸ்டர் தின செய்தியில் கூறியிருப்பதாவது: புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம்! நலம் வாழிய நலனே !
இன்று 20.04.25 ஞாயிற்றுக்கிழமை இறைமகன் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பக்கத்தில் இருந்த குகை சவக்குழியில் வைத்து பெரிய கல் வைத்து மூடி அடைத்து விட்டுச் சென்று விட்டார்கள்.
சனிக்கிழமை ஒய்வு நாளுக்குப் பின்னர் மூன்றாம் நாள் இயேசுவைப் பின் தொடர்ந்து கலிலியோவில் இருந்து வந்தவர்களில் சில பெண்கள் ஊர் திரும்பும் முன் இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்த்துவிட்டு செல்லாம் என்று வந்து பார்த்த போது ஆச்சரியம் கல்லறை திறக்கப்பட்டு அதன் அருகே இரண்டு தேவதூதர்கள் நின்று கொண்டு உயிரோடு இருக்கின்றவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறது என்ன அவர் உயிர்த்தெழுந்து விட்டார் என்ற நற்செய்தியை சொன்னார்கள்.
யூதர்கள் நம்பவில்லை
இதைக் கேட்ட மாத்திரத்தில் சந்தோஷத்தோடு ஓடி இயேசுவின் சீடர்களிடத்தில் இச்செய்தியை சொன்னார்கள். ஆனால் இதை பழைமைவாத யூதர்கள் நம்பவில்லை. ஆக கிருத்துவ மார்கம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. இயேசு கிறிஸ்துவின் 33 ஆண்டுகால மண்ணுலக வாழ்க்கையில் கடைசி மூன்று ஆண்டுகள் மட்டுமே சீடர்கள் உடன் இருந்தனர்.
வாழ்க்கை
அவர்கள் குற்றம் புரியக் கூடியவர்களாகவும் நிலையற்றவர்களுமாய் இருந்தார்கள். வாழ்க்கையின் வருமானத்திற்காக சாதாரண வேலையை செய்தவர்கள் இயேசுவை நம்பாதவர்கள் ஆபத்து காலத்தில் அவரை எங்களுக்குத் தெரியாது என்று மறுதலித்து ஒதுங்கி ஓடியவர்கள்.
சீடர்கள்
இப்படிப்பட்ட சீடர்கள் இல்லாமல் இயேசுவின் வரலாறு எழுதபபடவில்லை என்பது உண்மை. உலகம் முழுவதும் சென்று அவரின் சிலுவைப் பாட்டை நற்செய்தியை சொல்லி அதனால் கொலை செய்யப்பட்டு ரத்த சாட்சியாக மாறி வரலாற்றை புரட்டிப் போடும் ஆற்றல் பெற்றவர்களாக மாறி இயேசுவின் புதிய ஏற்பாட்டை உருவாக்கினார்கள் .
போராட்டத்தை போராடினேன்
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரிடம் எனக்காக வைக்கப் பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயபதியாகிய கர்த்தர் அதை எனக்குத் தந்தருள்வார். எனக்கு மாத்திரமல்ல அவர் பிரசன்ன மாறுதலை விரும்பும் யாவர்க்கும் அதைத் தந்தருள்வார்.
40ஆவது நாள்
உயிர்த்தெழுந்த இயேசு தன் சீடர்களை பெத்தானியா வரைக்கும் அழைத்துக் கொண்டு போய் 40 ஆவது நாள் இதோ உலகத்தின் முடிவுப் பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருப்பேன் என்று தம்முடைய கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார். அப்போது வானத்தில் இருந்து தேவதூதர்கள் இரங்கி வந்து இறைமகன் இயேசு கிறிஸ்துவை அவரின் சீடர்களை விட்டுப் பிரித்து பரலோகம் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
திருச்சபை
இயேசு கிறிஸ்து பரமேரிய பின்னர் அவரின் சீடர்கள் ஒன்று கூடி ஆகாது என்று ஒதுக்கித் தள்ளின கல்லே மூளைக்கு தலைக்கல்லாயிற்று என்பதைப் போன்று உன் பெயர் பேதுரு கற்பாறை இந்த பாறையின் மீதுதான் என் திருச்சபையைக் கட்டுவேன்.
மண்ணுலகம்
பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றிக் கொள்ள விண்ணரசின் திறவுகோலை நான் உன்னிடம் தருவேன் மண்ணுலகில் நீர் அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும். மண்ணுலகில் நீர் தடை செய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும் என்று இயேசு கிறிஸ்துவால் ஆசிர்வதிக்கப்பட்ட அவரின் முதன்மை சீடரான புனித பேதுரு தலைமையில் ஒன்று கூடி முதல் திருபளி பிரத்தனையை நடத்தினார்கள்.
மூளையில்
அதைக் கேட்ட மக்கள் மனம் திரும்பி இயேசுவை தங்கள் மேய்ப்பராக ஏற்றுக் கொண்டார்கள். அன்று தொட்டு இன்று வரை உலகில் ஏதாவது ஒரு மூளையில் மனம் திரும்பி கிருத்துவ மார்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வருகின்றார்கள் . அந்த புனித பேதுரு ரத்த சாட்சியாக மறித்த இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் 900 மக்கள் தொகை கொண்ட உலகத்தின் சின்னஞ்சிறு நாடு வாடிகன் சென்று அந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிரான்ஸ் நாட்டுத் தலைவர் நட்சத்திர பயிற்சியாளர் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ அவர்களின் அழைப்பில் தற்காப்புக் கலை பயிற்சியளிக்க பிரான்ஸ் நாடு சென்று இருந்த போது வாடிகன் சென்று புனித பேதுரு நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்க்க சென்றேன்.
5 இளைஞர்கள்
அங்கு ஒரு அனுபவம் புனித பேதுரு பேராலயம் உள்ளே நுழைந்து ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு சென்ற போது ஐந்து இளைஞர்கள் என்னைப் பின் தொடர்வதை உணர்ந்தேன். ஏதோ ஒன்று என் நடவடிக்கைகளில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்னை கண்கணிக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
நல்லடக்கம்
புனித பேதுரு நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சற்று முன் நான் நின்று அவர்களை எதிர் கொண்டேன் யார் நீங்கள் ஏன் என்னை பின்தொடர்கின்றீர்கள் என்று கேட்டபோது நீங்கள் எந்த நாட்டில் இருந்து வருகின்றீர்கள் என்று கேட்டார்கள். நான் இந்தியா தமிழ்நாடு என்றேன். எதற்காக வந்து இருக்கிறீர்கள் சுற்றுலா என்றேன், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டார்கள் ஏன் இவையெல்லாம் கேட்கிறீர்கள் என்றபோது எனது மோதிர விரலில் திராவிட ரத்னா தமிழினக் காவலர் என் அன்புத் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் முகம் பதித்த மோதிரத்தைச் சுட்டிக் காட்டி இது எதன் அடையாளம் என்று கேட்டார்கள்.
அரசியல்வாதி
நான் சிரித்துக் கொண்டே நான் ஒரு அரசியல்வாதி. இது என்னுடையத் தலைவர் என்றபோது அவர்கள் அதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அது சரி இதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் என்றபோது அவர்கள் சொன்னார்கள் நாங்கள் மதங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மாணவர்கள். ஐரோப்பாவில் ஆண்கள் இதைப் போன்று பெரிய கல் பதித்த மோதிரம் அணிவது இல்லை.
மீன் சின்னம்
இதைப் போன்ற மீன் சின்னம் பதித்த பெரிய மோதிரத்தை போப்பாண்டவர் அணிந்து இருப்பார். அது புனித பேதுரு மூலமாக வந்தது அவரைச் சந்திக்க வருகின்ற குருமார்கள் தாழ் பணிந்து வணங்கி அந்த மோதிரத்தில் முத்தம் பதிப்பார்கள் என்று விளக்கம் சொன்னார்கள்.
மதம் சார்ந்த ஆவல்
அதைப் போன்று உங்கள் கையில் இருக்கும் மோதிரம் ஏதாவது மதம் சார்ந்ததாக இருக்குமோ என்ற ஆவலில்தான் உங்களைப் பின்தொடர்ந்தோம் என்று சொல்லி விட்டு விடைபெற்றார்கள்.
இலங்கை அசோகவனம்
இனியத் தோழமைகளே இலங்கை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை கண்டு தான் இராமனின் தூதுவன் என்பதற்கு சாட்சியாக ராமன் சீதை திருமணத்தின் போது அணிவித்த மோதிரத்தை காட்டி தன் நிலையை உறுதிப்படுத்துவான் சொல்லின் செல்வன் அனுமன்.
போர்வாள்
அதைப் போன்றே நான் திராவிட இயக்கப் போர்வாள் புரட்சிப் புயல் தலைவர் திரு வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் என் மோதிர விரலில் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் முகம் பதித்த மோதிரம், சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம் இதுதான் என் அடையாளம் மகிழ்ச்சி அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த புனித ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்
மல்லை சி ஏ சத்யா
துணை பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
20.04.2025
இவ்வாறு அந்த பதிவில் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications