நாங்க மட்டும் என்ன குறைச்சலா? திமுகவிடம் 12 தொகுதிகளை கேட்கும் மதிமுக- துரை வைகோ சொன்னது என்ன?
திருச்சி: வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட ஆசைப்படுகிறது. ஆனால் தலைமைதான் முடிவு எடுக்கும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். அத்துடன் 12 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துரை வைகோ மேலும் கூறுகையில் திமுக கூட்டணியில் 8 ஆண்டுகளாக இருக்கிறோம். மதவாதத்தை எதிர்க்கக் கூடிய அணியில் இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கிறோம். அந்த நோக்கத்திற்கான அவசியம் இன்றைக்கும் இருக்கிறது.
அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எல்லா நேரங்களிலும் திமுக எடுக்கும் முடிவுகளுக்கு ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் அதை வைத்துக் கொண்டு கூட்டணியில் பிளவு, கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என சொல்ல முடியாது. தமிழகத்தை பொருத்தவரை இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது.
கம்யூனிஸ்ட்
கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கிறார்கள் என்றால் அது அவர்களது உரிமை. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அது போல்தான் மதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.
12 தொகுதிகள்
12 தொகுதிகளில் நின்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என விரும்புகிறார்கள். ஆனால் ஒரு முதன்மை செயலாளராக இத்தனை தொகுதிகள் வேண்டும் என நான் சொல்வது முதிர்ச்சியானதாக இருக்காது.
சீட்
இது தொடர்பாக இயக்கத்தின் தலைமைதான் முடிவெடுக்கும். திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கிறது. தேர்தல் காலகட்டத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் திமுக தலைமைக்கும் சீட் ஒதுக்குவதில் நெருக்கடி இருக்கும்.
மதவாதத்தை எதிர்த்து
அதே வேளையில் மதவாதத்தை எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ள எங்களது பொது நோக்கத்திற்கு பாதகம் வந்துவிடகத் கூடாது என்பதால் ஒரு சமரச நிலை எட்டப்படும். இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார். தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் மும்முரமாக பேசப்பட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் ஓட்டை
இந்த நிலையில் திமுக கூட்டணியில் ஓட்டை என அதிமுகவும், அதிமுக கூட்டணியில்தான் ஓட்டை என திமுகவும் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. திமுக கூட்டணியில் அதிக வாக்குசதவீதம் உள்ள கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற உத்தேசித்திருக்கிறதாம்.
கூட்டணி கட்சிகள்
பொதுவாக கூட்டணி கட்சிகள், தலைமையிடம் பேரம் பேசுவதும், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கேட்டதிலிருந்து ஒன்றிரண்டு குறைத்து கொடுப்பதும் நடக்ககூடியதுதான். அது போல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்கும் உத்தேசத்தில் இருக்கிறார்கள்.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு இந்த முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கவில்லை என்பதால் அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாகவும் அந்த கட்சியுடன் பாஜக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
சீட் ஒதுக்கீடு
அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்குவதாகவும் சொல்லப்படுகிறதாம். இதனால் மதிமுக, பாஜக கூட்டணிக்குச் செல்வார் என சொல்லப்பட்ட நிலையில் தாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்பதை துரை வைகோ தெளிவுப்படுத்திவிட்டார். பிறகு ஏன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அப்படி சொன்னார் என தெரியவில்லை.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications