மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் 'இந்தியாவின்' ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும்.. எச்சரித்த வைகோ
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு புதியதாக அணை கட்ட ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதே கேள்விக்குறியாகிவிடும் என மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுமே கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிகளை ஒற்றுமையாக எதிர்க்கின்றன என்றார் வைகோ. மேலும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக வரும் 14-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மதிமுக போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையில் மதிமுகவின் 30-வது பொதுக்குழு நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக எம்பிக்களான பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் மதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னை பொதுக் குழு கூட்டத்தில் மொத்தம் 22 தீர்மானங்களை நிறைவேற்றியது மதிமு.க.

லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி, துரை வைகோவின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தும் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்தும் நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னையில் வரும் 14-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மத்திய பட்ஜெட் என்பது கானல் நீர்தான். தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசுதான் தீர்வு காண வேண்டும். அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. இது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி.
காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்போம். கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க முடியாது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் மேகதாது அணை கட்டுவதை கடுமையாக எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை மீறி மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு என்பதே கேள்விக்குறியாகிவிடும் என எச்சரிக்கிறோம். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications