கறிக்கடைக்காரருக்கு ஒரே மாதத்தில் ஆட்டம் கண்ட வாழ்க்கை.. பார்சலை பிரித்த கணவன்.. ஓ மை காட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கையில் ரத்தம் படாமல், சட்டத்தின் வழியிலேயே கணவனின் வாழ்க்கையை ஆயுள் முழுக்க ஜெயிலுக்குள்ளேயே முடக்கிப்போட புதுமனைவி மாஸ்டர் பிளான் போட்டுள்ளது போலீசாரையே உரைய வைத்திருக்கிறது. அப்படியென்ன நடந்தது ஜம்மு காஷ்மீரில்?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் காண்டர்பால் மாவட்டம் சபாபோரா பகுதியை சேர்ந்தவர் அந்த கோழிப்பண்ணை உரிமையாளர்.. 28 வயதாகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் முடிந்தது. கோழிப்பண்ணை வைத்திருந்தாலும், அதே பகுதியில் கறிக்கடையும் வைத்திருக்கிறார்..

Meat Shop Owner

சம்பவத்தன்று கான்பூரிலிருந்து அவரது அட்ரஸுக்கு ஒரு கூரியர் பார்சல் வந்துள்ளது.. பார்சலை திறந்து பார்த்தவர் செம அதிர்ச்சி அடைந்தார்.. சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ கொக்கைன், 80 கிராம் தூய்மையான சரஸ் , தடைசெய்யப்பட்ட ஆபத்தான மனநல மாத்திரைகள் அத்தனையும் அந்த பார்சலுக்குள் கடத்தப்பட்டு வந்திருந்தன. .

இந்த பார்சலை கறிக்கடைக்காரர் பிரித்து பார்த்த கொஞ்ச நேரத்தில் போலீசுக்கும் இந்த விஷயம் பறந்தது.. அந்தப் பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காண்டர்பால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பார்சலையும் கைப்பற்றினர்.. கோழிப்பண்ணை ஓனரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

கோழிக்கடைக்காரருக்கு கூரியர்

கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே அடுத்தடுத்து நடப்பதை பார்த்து கறிக்கடைக்காரருக்கு தலையே சுற்றிவிட்டது. உடனே போலீசாரிடம், "சார், எனக்கு எதுவுமே தெரியாது.. சவூதி அரேபியாவிலிருந்து போனில் பேசிய நபர் ஒருவர் தனது பண்ணைக்கு குறைந்த விலையில் கோழித் தீவனம் தருவதாக சொன்னார்.. அதற்கான சாம்பிள்களை அனுப்புவதாக சொன்னார். அதுதான் என்று நினைத்து பார்சலை வாங்கினேன்..

என்னுடைய கல்யாணத்துக்கு முன்பும், இதே சவூதி நம்பரிலிருந்து எனக்கு போன் வந்தது.. இந்த திருமணத்தை நிறுத்திவிடு" என்று என்னை மிரட்டினார்கள்.. இது அவர்கள் வேலையாக இருக்குமோ? என்று சந்தேகம் உள்ளது" என்றார்.

கறிக்கடைக்காருக்கு வந்த போன்

உடனே போலீசார் கறிக்கடைக்காரர் மீது குற்ற வழக்குகள் எதுவும் செய்யாமல், அவரது 27 வயது மனைவியின் செல்போன் ரிக்கார்டுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமானது.. திருமணத்திற்கு முன்பே அந்த பெண்ணுக்கும், ஸ்ரீநகரின் ஜைனகோட் பகுதியைச் சேர்ந்த 51 வயதான தாரிக் அகமது சோஃபி என்ற அரசு ஊழியருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

பெற்றோர் வற்புறுத்தலால் கோழிப்பண்ணை ஓனரை அந்த பெண் கல்யாணம் செய்து கொண்டாராம்.. திருமணம் முடிந்தும்கூட, கள்ளக்காதலனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

வலுவான வழக்கில் சிக்க வைக்க பிளான்

கணவரை ஏதாவது ஒரு வலுவான வழக்கில் சிக்க வைத்து ஆயுள் முழுவதும் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டால், தாங்கள் இருவரும் எந்த தடையும் இல்லாமல் ஜாலியாக வாழலாம் என்று மனைவி திட்டமிட்டுள்ளார். இதை காதலனிடம் சொல்லவும், அவரும் சேர்ந்து இப்படியொரு கூரியர் பிளானை போட்டுள்ளார்.

காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான NDPS சட்டங்கள் அமலில் இருப்பதை பயன்படுத்தி கனகச்சிதமாக இந்த கள்ளக்காதல் ஜோடி பயன்படுத்தி கொண்டுள்ளது.. இதற்காக காதலன் தாரிக் அகமது, கான்பூரிலுள்ள தனது நண்பன் அரீப் மூலமாகப் போதைப்பொருளை வாங்கி, கோழித் தீவனம் என்று நம்பவைத்து கறிக்கடைக்காரரின் முகவரிக்கு அனுப்பியுள்ளார்.

கள்ளக்காதல் ஜோடி ஜெயிலில்

பிறகு போலீசுக்கும் தகவல் தந்து, கறிக்கடைக்காரரை கையும் களவுமாக சிக்க வைக்க பிளான் செய்ததும், இந்த விசாரணையில் அம்பலமானது..

சவூதி அரேபியாவிலிருந்து மிரட்டல் விடுத்த அரீப், இப்போது அந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இப்போதைக்கு அந்த கோழிப்பண்ணை ஓனரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் தாரிக் அகமது ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

டிரம் கொலைகள்

சமீபகாலமாகவே வடமாநிலங்களில் கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனைக் கொன்று டிரம்மில் அடைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காஷ்மீரில் அரங்கேறியுள்ள நிகழ்வு புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிடிக்காத திருமணத்தைப் பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கும்போது, அதன் பின்விளைவுகள் எத்தகைய கொடூரமான முடிவுகளை நோக்கி நகர்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+