அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால்! ஓய்வூதியம் கிடையாது! ஹைகோர்ட் அதிரடி
சென்னை: மருத்துவக் காரணங்களுக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற தகுதியற்றவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பணியிலிருந்து விலகல் விதிகள் குறித்து இது ஒரு முக்கிய விளக்கம்.
மருத்துவக் காரணங்களால் பணியைத் துறந்த இரு அரசு ஊழியர்கள், விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெற்றவர்களாகக் கருதி, ஓய்வூதியப் பலன்களை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், டி. பரத சக்கரவர்த்தி, சி. குமரப்பன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி குறித்த முந்தைய மாறுபட்ட தீர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இத்தீர்ப்பை அமர்வு வெளியிட்டது.
அத்தீர்ப்பில், "அரசுப் பணி விதிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா என நான்கு அம்சங்கள் உள்ளன. இவை வெவ்வேறு அர்த்தங்களைத் தருகின்றன. தமிழக ஓய்வூதிய விதிகள், உடல் அல்லது மனச்சோர்வு, பலவீனம் போன்ற மருத்துவ காரணங்களால் ராஜினாமா செய்வோருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க வகை செய்கின்றன.
மற்ற மருத்துவ காரணங்களைச் சொல்லி ராஜினாமா செய்பவர்கள், முந்தைய பணிக்காலத்தை இழந்துவிடுவதால், ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது" என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications