சூப்பர் ஸ்டான்னா சும்மாவா? ரஜினிகாந்துக்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை! இவரா? மகளுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே ஒரு விவாதம் எழுந்திருக்கிறது. ரஜினிக்கு சிறந்த ஜோடி யார் என ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் நமக்கு கிடைக்கிறது. உதாரணத்திற்கு நடிகை ஸ்ரீவித்யா ரஜினிக்கு மனைவியாக, தாயாக, அக்காவாக, மாமியாராக நடித்திருக்கிறார் என்ற தகவல். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் ரஜினிக்கு மகளாகவும் ஜோடியாகவும் நண்பனின் மனைவியாகவும் நடித்திருக்கிறார். யார் அவர்? என்ற கேள்வி தான் தற்போது எழுந்திருக்கிறது.
தமிழ் திரையரகில் சூப்பர் ஸ்டார் என்றால் குழந்தைகள் கூட கண்ணை மூடிக்கொண்டு ரஜினிகாந்தை கை காட்டும். அந்த அளவுக்கு தனது ஐகானிக் ஸ்டைல் மூலமாக திரைத் துறையில் நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கும் குதிரை ரஜினிகாந்த்.
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாக இருக்கிறது. அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு அந்த படத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர்.கைதி, மாஸ்டர், லியோ படங்களில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க ரஜினி குறித்து சமூக வலைதளங்களை அவரது ரசிகர்கள் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா, ரஜினிக்கு ஜோடியாக, சகோதரியாக, அம்மாவாக, மாமியாராக நடித்திருக்கிறார் என்பது போன்ற தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிக்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த நடிகை குறித்து பேசி வருகின்றனர்.
அவர் வேறு யாரும் அல்ல நடிகை மீனா தான். பேபி மீனாவாக நெஞ்சங்கள், எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்த அவர், எஜமான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பேபி மீனா எனக்கு ஜோடியா என ரஜினிகாந்த் ஆச்சரியத்தோடு கேட்டாராம். அதற்குப் பிறகு முத்து படத்தில் ரஜினிகாந்த் மீனா ஜோடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
பிறகு திரைத்துறையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தவர் 45 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இடையில் அவரது கணவர் மரணம் மீனாவை வெகுவாக பாதித்தது இருந்தபோது. மீண்டும் திரையுலகில் நடித்து வருகிறார் மீனா. முதன் முதலில் 1982ஆம் ஆண்டு எங்கேயோ கேட்ட குரல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதாவும் அம்பிகாவும் நடித்திருப்பார்கள். அம்பிகாவுக்கு மகளாக மீனா நடித்திருப்பார்.

தொடர்ந்து அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். அந்த படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையாக மீனா நடித்திருப்பார். சிறிது இடைவெளியில் மீனா வளர்ந்து விட்ட நிலையில் மீனா கதாநாயகியாக நடித்த முதல் படம் தெலுங்கில் ராஜேந்திர பிரசாத் ஹீரோவாக நடித்த 'நவயுகம்'. இந்தப் படம் 1990 இல் வெளியானது. அதன் பிறகு அவர் தமிழில் 'ஒரு புதிய கதை' படத்தில் புதுமுகம் பிரபுராஜ் ஜோடியாக நடித்தார்.
அதற்கு பிறகு தான் எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து முத்து படத்திலும் இந்த ஜோடி நடித்த நிலையில் அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனது. தொடர்ந்து அஜித் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்த மீனா கடைசியாக அண்ணாத்த படத்தில் அத்தை மகள் கேரக்டரில் நடித்திருப்பார். அதற்கு முன்னதாக குசேலன் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாவின் மகளும் இப்போது வளர்ந்து விட்டார். தெறி படத்தில் விஜய்க்கு மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications