சென்னை அழைத்துவரப்பட்டார் மீரா மிதுன்... காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜர்
பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து பேட்டி அளித்த நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவான அவர் திருவனந்தபுரம் சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்டார். அவரை திருவனந்தபுரத்திலிருந்து சாலை மார்கமாக சென்னை காவல் ஆணையரகத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர் .
Recommended Video
இந்நிலையில் காலை சரியாக 11.10 க்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு மீரா மிதுனை போலீஸார் அழைத்து வந்தனர்.

சர்ச்சை நாயகி மீரா மிதுன்
சர்ச்சைக்கு பேர் போனவர் மீரா மிதுன். அதிரடி பேட்டி மூலம் தொடர் சர்ச்சையில் சிக்கியவர். மாடலிங் துறையில் உள்ள சக போட்டியாளருடன் ஏற்பட்ட பிரச்சினையில் புகார் அளிக்க வந்ததன் மூலம் மீரா மிதுன் முதன் முதலில் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். பின்னர் அவர் கொடுத்த பேட்டிகள் சட்டத்தின் மீதுள்ள அவரது அறிவை வெளிப்படுத்தியது. ஆள் வைத்து புகார் தாரரை அடிக்க பேசிய செல்போன் பேச்சு வைரலானது.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இயக்குநர் சேரன் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். வெளியில் வந்தப்பின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் மீது விமர்சனம் வைத்தார். தொடர்ந்து அஜித், விஜய் என பல பிரபலங்களின் மீது விமர்சனம் வைத்து அதன் மூலம் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்துக்கொண்டார்.
இடையில் தனியார் விஜிலென்ஸ் அமைப்பு ஒன்றில் தமிழகத்துக்கு பொறுப்பு வாங்கிவிட்டு தமிழகத்தில் லஞ்சம் இல்லாமல் ஆக்குவேன் என விவரம் தெரியாமல் லஞ்ச ஒழிப்பு டிஜிபி ரேஞ்சுக்கு பேட்டி அளித்ததன் மூலம் சட்டம், காவல்துறையில் தனக்கிருக்கும் விசாலமான அறிவை வெளிப்படுத்தினார். அப்போதே நெட்டிசன்கள் அவரை விமர்சித்தனர்.

சட்டம் தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கினார்
தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட்டாலும் அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தாலும் பெரிய அளவில் அவரை அது பாதிக்கவில்லை. இதனால் அவர் தான் என்ன பேசுகிறோம் என்பது அறியாமல் சமூக வலைதளங்களில் வரும் லைக்குகளை வைத்து கண்டபடி பேச ஆரம்பித்தார். அப்படி பேசித்தான் சமீபத்தில் மிகப்பெரிய சிக்கலில் சிக்கினார் மீரா மிதுன்.
மீரா மிதுன் சமீபத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசியதன் மூலம் வன்கொடுமைச் சட்டத்தில் சிக்கினார். சமீபத்தில் ஒரு யூடியூப் தளத்துக்கு பேட்டி அளித்த அவர் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்று , "பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்" என்று பேட்டி அளித்தார். தொடர்ந்து அவதூறான வார்த்தைகளை பேசினார்.

பெரும் பிரச்சினையை கிளப்பிய பேட்டி
பட்டியலின மக்களைப் பற்றி மீரா மிதுன் பேசியிருக்கும் வெறுப்புப் பேச்சு, சாதி பெயரை குறிப்பிட்டுத் திட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலின மக்களை விமர்சித்து மிகப்பெரும் அரசியல்வாதிகள் எல்லாம் பெரும் சிக்கலில் சிக்கிய சூழலில் மீரா மிதுன் அடிப்படி சட்டப்புரிதல் இல்லாமல் பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது.பலரும் அவர் பேச்சைக் கண்டித்து கைது செய்ய வலியுறுத்தினர்.
சென்னை காவல் ஆணையரிடம் விசிக பிரமுகர் வன்னி அரசு புகார் அளித்தார். அவரது புகாரைப்பெற்ற சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது ஐபிசி பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தை தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலை தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2)(மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராக பேசுவது, நடப்பது) 3(1) r, 3(1)(u), 3(1) (s) of SC/ST prevention act (2வன்கொடுமை தடுப்புச் சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பிரதமர், முதல்வருக்கு வீடியோ
அதன் பின்னர் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். வன்கொடுமைச் சட்டத்தின் பாதிப்பு புரியாமல் தேசத்தலைவர்கள் ரேஞ்சுக்கு மீரா மிதுன் பில்டப் கொடுத்து வீடியோ வெளியிட்டார். பிரதமருக்கும், முதல்வருக்கும் என்னை கைது செய்தால் என சவால் விட்டால், கனவில் கூட நடக்காது என்றெல்லாம் சவால் விட்டார்.

தலைமறைவு
பின்னர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். சைபர் பிரிவு போலீஸாரை சாதாரணமாக நினைத்து வீடியோக்களை பதிவு செய்து வந்தார். நவீன விஞ்ஞானத்தின் முன் தலைமறைவு சாத்தியமே இல்லை. அதிலும் இதுபோன்ற புரிதல் இல்லாத ஒருவர் எளிதாக தனதி ஐபி அட்ரஸ், செல்போன் எண்கள் மூலம் சிக்குவார் என்பது தற்போது உறுதியானது.
அவரது செல்போன் எண் மற்றும் வீடியோ பதிவு ஐபி அட்ரஸை சைபர் பிரிவு போலீஸார் ஆய்வு செய்தபோது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் போலீஸார் அங்குச் சென்று அவரை கைது செய்தனர்.

கைதின்போது அழுது ஆர்ப்பாட்டம்
தலைமறைவாக திருவனந்தபுரத்தில் மறைந்திருந்த மீரா மிதுனை போலீஸார் வளைத்துப்பிடித்து கைது செய்த போது அவர் கத்தி, கூச்சலிட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து அதையும் வீடியோ எடுத்து பதிவிட்டார், அதுவும் நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் மசியாத போலீஸார் அவரை கைது செய்து ஆலப்புழா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வெளிமாநிலம் என்பதால் டிரான்சிட் வாரண்ட் பெற்றப்பின் நேற்றிரவு அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பினர். சாலை மார்கமாக அவரை சென்னை அழைத்து வந்தனர். இன்று காலை சரியாக 11.10க்கு அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
பின்னர் இங்கு மாஜிஸ்ட்ரேட் இல்லத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
ரெட் டீ ஷர்ட் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் ரேஞ்சுக்கு போலீஸை பாடாய் படுத்திய மீரா மிதுன்
தான் கைது செய்யப்பட்டதிலிருந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் மீரா மிதுன். விஜய் சேதுபதி, நயன் தாரா நடித்த ஒரு படத்தைல் அவரை கடத்தி கட்டிப்போட்டிருப்பார். ஆனாலும் அவர் ரெட் டீஷர்ட் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கத்திக்கொண்டிருப்பார். அவரைப்பார்த்து கடத்திய நபரும், ஆனந்தராஜும் பயபட்டுவார்கள். அந்த் அந்த அளவுக்கு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலற வைத்துள்ளார் மீரா மிதுன்.
எப்படியாவது சென்னை அழைத்து வந்து ரிமாண்ட் பண்ணிட்டா போதும்டா சாமி என்கிற அளவுக்கு போலீஸார் வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஜாமீன் கிடைக்காத பிரிவு ஆகும். எப்படியும் கீழமை நீதிமன்றத்தில் கிடைக்காத ஜாமீன் செசன்ஸ் நீதிமன்றத்தில் தான் கிடைக்கும். அதனால் அவர் மாதக்கணக்கில் சிறையில் இருக்க வாய்ப்புண்டு என்கிறது போலீஸ் தரப்பு.












Click it and Unblock the Notifications