சல்லி சல்லியா போச்சே பாஜக பிளான்.. தலைவரை விடுங்க.. எனக்கு "அவங்க" மேலதான் டவுட்.. பொளேர் வன்னியரசு
அண்ணாமலை குறித்து செந்தில்பாலாஜி சொன்னது சரியான கருத்துதான் என வன்னியரசு கூறியுள்ளார்
சென்னை: செந்தில்பாலாஜி எப்படி அண்ணாமலையை சந்தேகப்படுகிறாரோ, அதுபோலவே நான் கூடுதலாக என்ஐஏ-வையே சந்தேகப்படுகிறேன்" என்று விசிகவின் வன்னியரசு தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தந்த பேட்டியில், "கோவை சிலிண்டர் வெடிவிபத்து தொடர்பாக, காவல் துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், உண்மைத் தன்மையை வெளியிடுவதற்கு முன்பாகவே, பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார்.
அவருக்கு இந்த தகவல்கள் எப்படி கிடைத்தது? எதன் அடிப்படையில் இவ்வாறு அவர் வெளியிட்டார்? என்பது தொடர்பாக என்ஐஏ முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்து குறித்து, விசிகவின் முக்கிய தலைவரும், அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளருமான வன்னியரசு நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

ட்ரெயினிங்
வன்னியரசு நம்மிடம் சொன்னதாவது: "மும்பை நீதிமன்றத்தில், யஸ்வந்த் ஷிண்டே என்பவர் 7 பக்க அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.. அதில், இந்தியா முழுக்க ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியர் தந்த பிரமாண பத்திரத்தில், இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் குண்டு வைப்பதற்கு, ஆர்எஸ்எஸ் பயிற்சி அளித்தது.. இதுகுறித்து நான் மோகன் பகவத்திடம் சொன்னேன்.. ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவில்லை.. பயிற்சி தந்தது உண்மை என்று நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.. இந்த பின்னணியில் இருந்துதான், என்ஐஏவிடம் விசாரிக்க வேண்டும் என்ற கோணத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லியிருக்கலாம்.

மெகா டவுட்
அதாவது, "ஆர்எஸ்எஸ் பின்னணியில், ஆர்எஸ்எஸ் செயல்பாட்டில் அண்ணாமலை போன்றோர் செயல்படுகிறார்கள், சிலிண்டர் வெடிவிபத்தில் என்னென்ன பொருட்கள் உள்ளே இருந்தன என்பது குறித்தெல்லாம் விலாவரியாக அண்ணாமலை பேசுகிறார்.. யஷ்வந்த் ஷிண்டே சொன்ன அந்த ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு, அண்ணாமலைக்கும் பொருந்தும், அதனால்தான் விரிவாக தகவலை சொல்கிறார், இதனாலேயே என்ஐஏ விசாரிக்கப்பட வேண்டும்" என்ற அடிப்படையிலேயே செந்தில்பாலாஜி அந்த கருத்தை சொல்லியிருக்கலாம்.

குறி 1
ஒரு பொறுப்பான கட்சிக்கு தலைவராக இருக்கிறார் அண்ணாமலை.. அப்படியானால் தான் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்கும் அண்ணாமலைதான் பொறுப்பேற்க வேண்டும்.. இதுவரை அண்ணாமலை சொன்ன எந்த ஒரு கருத்துக்கும், உண்மைக்கும் சம்பந்தமே கிடையாது.. பாஸ்போர்ட் விஷயத்தில் டேவிட்சன் குறித்து சொன்ன குற்றச்சாட்டு, பொய் என்பதை கோர்ட்டே சொல்லிவிட்டது.. அதேபோல திமுக அமைச்சர்கள் மீது சொன்ன குற்றச்சாட்டுகளும், எந்த இடத்திலும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.. அதற்கான ஆதாரங்களை தரவும் அண்ணாமலை தயாராக இல்லை.. எல்லாமே பொய்கள்தான்.. இந்த சிலிண்டர் வெடிவிபத்திலும், அப்படித்தான்.

குறி 2
இறந்துபோன நபர் 2019-ல் என்ஐஏவால் விசாரிக்கப்பட்டவர்.. பொதுவாக, என்ஐஏ விசாரிக்கிறது என்றாலே, கண்காணிப்பில்தான் வைப்பார்கள்.. அப்படிப்பட்ட நபர் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வைக்கிறார்.. இதை தமிழக காவல்துறை விசாரிப்பதற்கு முன்பாக, என்ஐஏ விசாரிப்பதற்கு முன்பாகவே அண்ணாமலை அதை சொல்கிறார்.. இதைதான் செந்தில்பாலாஜி சொல்லும் மிக முக்கியமான குற்றச்சாட்டு.. எனக்கு என்ஐஏ மீதே எனக்கு டவுட் இருக்கிறது. யஷ்வந்த் சொன்னதை வைத்தோ அல்லது மோகன் பகவத் போன்றோரை என்ஐஏ ஏன் விசாரிக்கவில்லை?

ப்ளான் A
இந்த சிலிண்டர் வெடிவிபத்து நடந்ததுமே, டிஜிபி சைலேந்திரபாபு அங்கே விரைகிறார்.. கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் விசாரிக்கிறார்..அதுக்கு பிறகுதான் 4 பேர் உபாவில் கைதாகிறார்கள்.. சிலிண்டர் விபத்தில் இப்படி ஒரு பின்னணி இருப்பதை தமிழக காவல்துறைதான் கண்டுபிடித்ததே தவிர, என்ஐஏ ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை.. இந்தியா முழுக்க எந்த ஒன்றையுமே என்ஐஏ கண்டுபிடித்தது இல்லை.. இதுவரை எந்த குற்றச்சாட்டையுமே அவர்கள் நிரூபித்ததும் கிடையாது.. ஆர்எஸ்எஸ்ஸின் கிளை அமைப்பாக என்ஐஏ செயல்படுகிறது.. தமிழக காவல்துறை மிக சிறப்பாக செயல்படுகிறது.

ப்ளான் B
ஆர்எஸ்எஸ்ஸின் கிளை அமைப்பாக என்ஐஏ ஏன் செயல்படுகிறது என்றால், இஸ்லாமியர்கள், தலித்துகள், கிறிஸ்தவர்களை குறி வைத்து கைது செய்துள்ளது.. ஏன் யஷ்வந்த் தந்த குற்றச்சாட்டை விசாரிக்கவில்லை? புல்வாமா தாக்குதலுக்கு முன்பாகவே, பத்திரிகையாளர் என்று சொல்லக்கூடிய அருணாப் கோ ஸ்வாமி, முன்கூட்டியே அதை பற்றி செய்தி போட்டாரே, அவரை ஏன் விசாரிக்கவில்லை? புல்வாமா தாக்குதலில் 50 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்களே? ஏன் விசாரிக்கவில்லை? அவ்வளவு வெடிமருந்துகள் கிடைத்ததே எப்படி? அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமியை மட்டும் ஏன் என்ஐஏ விசாரிக்கிறது? உபாவில் அவரை கைது செய்தது?

டவுட் 1
இந்த என்ஐஏ என்பது பாஜக ஆளாத மாநிலங்களில் குழப்பத்தை விளைவித்து, மக்களை அச்சுறுத்துவதுதான்.. தேசத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ், பாஜகவை பாதுகாத்து கொண்டிருக்கிறது.. இந்து ராஷ்டிரம் அமைக்க ஆர்எஸ்எஸ் செயல்படுத்துவற்கான கிளை அமைப்புதான் இந்த என்ஐஏ.. இந்த என்ஐஏ திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தபோதே, நாடாளுமன்றத்தில் விசிகவின் எங்கள் தலைவர் அதை கடுமையாக எதிர்த்தார்..

டவுட் 2
காரணம், அது மாநில உரிமைகளுக்கு எதிரானது.. எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல் என்றாலும், மாநில அரசு அனுமதி தர வேண்டியதில்லை.. அதை என்ஐஏவே கையில் எடுத்துக்கொள்ளும்.. இதைதான் அன்றே எதிர்த்தோம்.. இன்று தமிழக அரசு அனுமதி தந்ததால்தான், என்ஐஏ விசாரிப்பதாக நாங்கள் பார்க்கவில்லை.. அதேபோல, செந்தில்பாலாஜி எப்படி அண்ணாமலையை சந்தேகப்படுகிறாரோ, அதுபோலவே நான் கூடுதலாக என்ஐஏ-வையே சந்தேகப்படுகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications