தமிழ்நாடு முழுவதும் மெகா மருத்துவ முகாம்.. அரசு சூப்பர் ஏற்பாடு.. செய்யப்படும் பரிசோதனைகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா அரசு சார்பாக கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Mega Medical Camp across Tamilnadu, Health department organized - What are the tests done?

இந்த மருத்துவ முகாமை அமைச்சர் மா .சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெறும். இந்த மருத்துவ முகாமில் மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்படும். சென்னையில் மட்டும் 10 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பிற பகுதிகளில் 90 இடங்களிள் நடைபெறுகிறது.

இந்த மெகா சிறப்பு மருத்துவ முகாமில் சிறுநீரக பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை பரிசோதனை, பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை, எலும்பு மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசோதனை நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+