புல்லட் ரயில்.. கச்சா எண்ணெய் ஒப்பந்தம்! கோடிகளை நிதியாக கொட்டிய "மேகா இன்ஜினியரிங்".. யார் இவர்கள்?
சென்னை; மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹980 கோடிகளை வழங்கிய உள்ளது. இது இந்தியாவில் அதிக தொகையை நிதியாக வழங்கிய இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகும்.
நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த தேர்தல் பத்திர தீர்ப்பு என்பது மொனோபாலி தொழிலதிபர்களுக்கும், அரசியல் கட்சிகளை தாஜா செய்து வந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விழுந்த ஒரு அடியாகும். இதுவரை அவர்கள் கொடுத்த.. கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் தரவுகள் வெளிவந்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தனர் என்ற மொத்த விவரமும் அம்பலப்படுத்தப்படும்.

எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருந்தது.. அதனால் எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும். அரசியல் வர்க்கமும் தொழில்துறையும் இந்த தீர்ப்பால் தடம் புரண்டு உள்ளன என்றுதான் கூற வேண்டும்.
தேர்தல் பாத்திரங்கள் செயல்படும் முறை: கடந்த 2018ம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.
இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.
இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது. இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில், நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12 வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. இந்த நிலையில் இன்று மாலை அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது.
சலுகை; தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் முக்கியமான சலுகை ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
அதன்படி தேர்தல் பாத்திரங்களை பயன்படுத்தி நிதி கொடுத்த நிறுவனங்கள் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் கொடுத்த பணத்தை வெளியிட வேண்டும். அதேபோல் எந்த கட்சி எல்லாம் பணம் பெற்றனர் என்றும் வெளியிட வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று சலுகை கொடுத்துள்ளது.
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹980 கோடிகளை வழங்கிய உள்ளது. இது இந்தியாவில் அதிக தொகையை நிதியாக வழங்கிய இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகும். அதே நிறுவனம் மங்கோலியாவில் ₹5400 கோடி பசுமை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை இந்தியா சார்பாக பெற்றது..
மேலும், அதே நிறுவனம் ₹3681 கோடி மதிப்புள்ள மும்பை புல்லட் ரயில் நிலையத் திட்டத்தைதிற்கான ஒப்பந்தத்தையும் பெற்றது. 38,000 கோடி மதிப்பிலான காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சமீபத்தில் சிஏஜி சுட்டிக் காட்டியது. இந்த நிறுவனம்தான் இந்த திட்டத்தின் முக்கிய ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல ஒப்பந்தங்களை பெற்ற நிறுவனம் நிதியாக யாருக்கு இவ்வளவு கோடிகளை அள்ளிக்கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications