மேகதாதுவில் அணை.. 2 மாநிலங்களும் பயன் அடையலாம்! விஜய் முன்பாகவே பேசிய டிகே சிவக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவளத்தில் நடைபெற்று வரும் தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் பேசிய கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது பிரச்சினை பற்றி பேசியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் இரண்டு மாநிலங்கள் பயன் அடையும் என்று விஜய் முன்பாகவே டிகே சிவக்குமார் பேசியுள்ளார். டிகே சிவக்குமாரின் இந்த பேச்சுக்கு பதிலடியாக முதல்வர் விஜய்யும், கர்நாடகாவின் அடாவடிப்போக்கு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் விடி சதிஷன் ஆகியோரும் தெலுங்கானா முதல்வர் சார்பில் துணை முதல்வரும், புதுவை சார்பில் துணை நிலை ஆளுநரும் பங்கேற்றுள்ளனர்.

Mekedatu Dam Both states could benefit DK Shivakumar speaks in Vijay s presence

அணை கட்டினால் 2 மாநிலமும் பயன்படும்

இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் டிகே சிவக்குமார் அருகருகே அமர்ந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியுள்ளார். டிகே சிவக்குமார் கூறும் போது, "மேகதாது அணை கட்டினால் வறட்சியான காலங்களில் நீரை சேமித்து பயன்படுத்தலாம்.

மேகதாது அணை கட்டப்படாததால் உபரி நீர் கடலில் வீணாக கலக்கிறது. மேகதாது அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் பலனடையும். ஆந்திராவின் எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடாகா முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சட்ட போரட்டம் நடைபெற்று வருகிறது" என்று பேசினார்.

தொகுதி மறுவரையறை குறித்து பேசிய டிகே சிவக்குமார்

காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட துடித்து வருகிறது. இந்த அணை கட்டினால், தமிழ்நாட்டு பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால் தமிழ்நாடு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டவே கூடாது என்று தமிழ்நாடு கூறி வரும் நிலையில், இன்றைய தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் முன்பாகவே மேகதாது விவகாரத்தை எழுப்பி பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய டிகே சிவக்குமார் கூறியதாவது:- மற்ற மாநிலங்களின் உரிமைகளை கர்நாடக மதிக்கிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பிரதிநித்துவத்தை இழக்கக் கூடாது. நமது வெற்றியே நாடாளுமன்றத்தின் குரலை பலவீனப்படுத்த காரணமாக அமைந்து விடக்கூடாது. மகளிர் இடதுக்கீட்டுக்காக மக்கள் தொகை கணக்கீடு வரை காத்திருக்க வேண்டியது இல்லை.

நியாயமான நிதி பகிர்வை தர வேண்டும்

இந்திய பொருளாதாரத்தின் என்ஜினாக தென் மாநிலங்கள்தான் உள்ளது. ஐந்து மாநிலங்கள் மட்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. இந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதம் மட்டுமே இருந்தாலும் ஜிடிபிக்கு அதிகம் பங்களிக்கிறது.

இந்த வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் வலுவான மாநிலமாக கர்நாடக உள்ளது. மென்பொருள் ஏற்றுமதி, அன்னிய முதலீடு, ஏரோஸ்பேஸ், காபி உள்ளிட்ட துறைகளில் கர்நாடகா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நியாயமான அளவில் எங்களுக்கு உரிய நிதி பகிர்வை தர வேண்டும். மத்திய அரசிடம் நாங்கள் இதையே கேட்கிறோம். நாங்கள் எந்த அளவு பங்களிப்பு செய்கிறமோ? அந்த அளவு எங்களை கவனத்தில் கொள்ளுங்கள்" என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+