எப்போதான் கரையை கடக்கும்.. இப்படி கன்ப்யூஸ் பண்ணுதே கஜா புயல்!
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல், இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கும், தனியார் வானிலை ஆய்வாளர்களுக்கும், பெரும் சவாலாக உருவாகியுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காணப்பட்ட நிலையில் பின்னர அது புயலாக உருவெடுத்ததாக வானிலை இலாகாவால் அ்றிவிக்கப்பட்டது.
புயலுக்கு பெயர் சூட்டும் நடைமுறையின் ஒரு பகுதியாக, தாய்லாந்து நாடு சார்பில், இந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டியுள்ளது.

விரல் விட்டு ஆட்டுது
ஆனால் இந்த புயல் அத்தனைபேரின் கண்களும் விரலைவிட்டு ஆட்டி வருகிறது. புயல் நகரும் திசை என்பதிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் கடலூர் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என்ற அளவில் கணிக்கப்பட்டது. ஆனால் நேற்றுமுன்தினம் மாலையில், இந்த நிலை மாறி, புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் நடுவே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. புயலின் வேகத்திலும் வித்தியாசம் காணப்படுகிறது.
[ஆச்சரியம், ஆனால் உண்மை.. கஜா புயல் தோற்றத்தை உற்று பாருங்கள் ஒரு உண்மை தெரியும் ]

வேகத்தில் வேறுபாடு
நேற்று அதிகாலை ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து பிறகு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் குறைந்தது. ஆனால் மதியம் மும்மடங்காக வேகம் அதிகரித்து 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இப்போது மீண்டும் ஆறு கிலோமீட்டராக வேகம் குறைந்து நகர்ந்தபடி உள்ளது.

எப்போது வரும்
புயலின் வேகம் மற்றும் அதன் திசை தெரியாமல் விழி பிதுங்கி போயுள்ளனர் தனியார் வானிலை ஆய்வாளர்கள். இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கும் கூட இந்த புயல் கண்ணாமூச்சி தான் காட்டிக்கொண்டு உள்ளது. அங்கே வருகிறது எங்கே வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, இன்னும் புயல் வந்தபாடில்லை.
|
மாலையில் கரையை கடக்கும்
நாளை மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலையில்தான் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் இந்த ஒரு மீம் தெளிவாக சொல்கிறது. சீக்கிரம் நகர்ந்து செல்லப்பா.. நாங்கள் படும் அவஸ்தை தாங்க முடியவில்லை.. மயக்கமே வந்து விடுகிறது என்பது போல ஆய்வாளர்கள் சொல்வதை போல உள்ளது இந்த மீம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications