ஆச்சரியம், ஆனால் உண்மை.. கஜா புயல் தோற்றத்தை உற்று பாருங்கள் ஒரு உண்மை தெரியும்
Recommended Video

சென்னை: கஜா புயல் சுழற்சியை பார்க்கும்போது யானை போலவே உள்ளது தெரிய வந்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை மாலை, கடலூர் மற்றும் பாம்பன் நடுவே கரையைக் கடக்க உள்ளது.

இன்று காலை நிலவரப்படி, கஜா புயல், சென்னையிலிருந்து சுமார் 540 கிலோ மீட்டர் தொலைவில், மையம் கொண்டுள்ளது. இந்த புயலின் வேகம் மற்றும் அதன் பாதை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
[கஜா புயல் எதிரொலி.. கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை]
இப்படி கண்காணிப்பதற்காக, லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று இப்போது வைரல் ஆகியுள்ளது. கஜா புயலால் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி என்பது ஒரு யானையின் உருவத்தை கொண்டிருப்பதாக கூறுகிறது இந்த புகைப்படம். மேலும் அதன் தும்பிக்கை, தமிழகத்தை நோக்கியதாக உள்ளது.
#Laughter is the best medicine. While the wait for #CYcloneGaja continues..here is something to keep your spirits up. Could not believe when satellite image of #Gaja resembled an Elephant's trunk aimed at #TamilNadu coast at a certain angle #COMK #கஜா #கஜாவராண்டா . pic.twitter.com/rpfdsQxrLp
— Chennairains (@ChennaiRains) November 13, 2018
கஜா என்பதற்கு யானை என்று ஒரு பொருளும் உண்டு. அந்த வார்த்தையின் பொருளை நிரூபிப்பது போல யானை போல் தோற்றம் அளிப்பதாக உள்ள இந்த படம் வைரல் ஆகியுள்ளது.
பொதுவாக புயலின் சுழற்சி என்பது பல்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியது. வேறு புயலுக்கும் கூட இது போன்ற யானை வடிவம் கிடைக்கும் என்ற போதிலும் கூட, கஜா என்ற பெயருக்கு இது பொருத்தமானதாக உள்ளது தானே.












Click it and Unblock the Notifications