சிங்கம் போல மாறும் சிம்ம ராசி.. புரோமோஷன், பணவரவு, திடீர் அதிர்ஷ்டம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத ராசி பலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் சிம்ம ராசிக்கு கிடைக்கும் பலன்களை விரிவாக காணலாம்.

ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர். சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் சிம்ம ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

aadi-month-zodiac-sign-simmam-rasi-people-will-get-good-fortune-luck-in-this-month

சிம்மம்

சிம்ம ராசி மற்றும் லக்னத்தினர் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷங்களில் அனுகூலம் காணப்படும். பதவி உயர்வு கிடைக்கும். சுப விரய பாக்கியம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். தாய்க்கு, தந்தைக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதால் பெரிய அளவுக்குப் பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். அவர்கள் உங்களுக்காக நிறைய விஷயங்களை செய்வார்கள்.

பதவி உயர்வு

குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக தீரும். கூட்டாளிகள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பெரிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய அமைப்பு ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தெய்வ வழிபாடுகளை செய்வீர்கள்.

பயணங்கள்

நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். உத்தியோகம், வியாபாரத்தில், தொழில், படிப்பில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களுடைய செல்வாக்கு உயரும். தெய்வ வழிபாடுகளைச் செய்வது நல்லது. அருகில் இருக்கும் பெருமாள் கோயில்களில் வழிபாடு செய்வது, பசுநெய் வழங்குவது சகலவித நன்மைகளைத் தரும். சூரியன் 12 இல் இருப்பதால் ஏழைகளுக்கு உணவு தானமளிப்பது ஏற்றத்தைத் தரும்.

முன்னேற்றம்

அடுத்தடுத்து எடுக்க வேண்டிய முடிவுகளை எடுப்பது நன்மை பயக்கும். கடல் கடந்த தொழில்கள் திடீரென ஏற்படும். அதனால் பெரிய வெற்றி பெறும் யோகம் உண்டாகும். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தடைபட்டிருந்த கல்விகள் இனி கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் யோகம் உண்டாகும். நிலம், வீடு வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

தினந்தோறும் பெருமாள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும். விஷ்ணு சஹஸ்ஹரநாமத்தை சொல்லி வருவது ஏற்றத்தைத் தரும். வயிறு தொடர்பான பாதிப்புகளில் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. கீழ் முதுகுத் தண்டுவட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கால், கை மரத்துப்போவது போன்ற பாதிப்புகள் வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+