ஆ! சாகர் அக்கவுண்டில் இருந்து ரூ.13 கோடியை டிரான்ஸ்பர் பண்ணனுமா? சிஎஸ்கேவிற்கு போன மெசேஜ்.. மீம்ஸ்!
சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிதான் தற்போது டேபிள் டாப்பில் உள்ளது. 7 போட்டிகளில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் வென்று நம்பிக்கை அளித்துள்ளது.
சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சிறப்பாக ஆடுவதாலும், டாப் ஆர்டர் நல்ல வலிமையில் இருப்பதாலும் அணி மீது பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

பொதுவாக சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் கடந்த 4 வருடங்களில் இவ்வளவு சிறப்பாக இருந்தது இல்லை. ஆனால் இந்த வருடம் கெய்க்வாட், கான்வே, துபே, ரஹானே, ராயுடு, மொயின் என்று டாப் ஆர்டர் மொத்தமே நல்ல பார்மில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்த தொடர் வெற்றியை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
வெற்றி :
இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடியாக வென்றுள்ளது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 235/4 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி வெறும் 186-8 ரன்கள் மட்டுமே 20 ஓவரில் எடுக்க சிஎஸ்கே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நேற்று சிஎஸ்கே ஒப்பனர் கெய்க்வாட் 20 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். தேவன் கான்வே 40 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடக்கம். இன்னொரு பக்கம் சிவம் துபே 50 ரன்களை 21 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடக்கம்.
இன்னொரு பக்கம் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய ரஹானே 29 பந்தில் அவுட் ஆகாமல் 71 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸ், 6 பவுண்டரி அடக்கம்.

சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டே, தீக்சான சிறப்பாக பவுலிங் செய்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். சிஎஸ்கே அணியின் பவர் பிளே பவுலிங் அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
முக்கியமாக நேற்று இந்த போட்டியில் ரஹானே ஆடிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஆட்டம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. சரியான கண்ட்ரோலில் அவர் துல்லியமாக பேட்டிங் செய்தார். எங்கேயுமே அவர் பால்ஸ் ஷாட் அடிக்கவில்லை. சிஎஸ்கே அணியில் பொதுவாக மறைந்து போன ஆன்மா வந்தால் கூட அசத்தல் ஆட்டம் போடும். அதை நேற்று ரஹானேவும் செய்து காட்டினார்.

இங்கே சொதப்பிவிடுவார் என்று கூறும் அளவிற்கு அவரின் பேட்டிங் எங்குமே சொதப்பலாக இல்லை. டெஸ்ட் வீரர் என்று அழைக்கப்பட்டவர்.. டெஸ்ட் அணியில் இருந்தே நீக்கப்பட்ட பின்பும் கூட டி 20 போட்டியில் சிதறவிட்டுள்ளார்.
ரஹானேவின் இந்த பேட்டிங்கை வைத்தும் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். முக்கியமாக அணியில் 15 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுவிட்டு கடந்த சீஸனும் ஆடாமல், இந்த சீஸனும் காயம் காரணமாக ஆடாமல் இருக்கும் தீபக் சாகரை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

அவரின் 15 கோடி ரூபாயில் 2 கோடி ரூபாயை எடுத்துவிட்டு.. மீதம் உள்ள 13 கோடி ரூபாயை ரஹானேவிற்கு கொடுக்க வேண்டும், அவரை வெறும் 50 லட்சம் ரூபாயில்தான் எடுத்தனர் என்று பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
அதேபோல் வெளி மைதானங்களில் கூட சிஎஸ்கே அணிக்கு கூடும் மாபெரும் மக்கள் கூட்டத்தை வைத்தும் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications