காலம் சொல்லும் காவியமாக நினைவகங்கள்! பாரபட்சமின்றி முதல்வர் ஸ்டாலின் காட்டிய தாராளம்!
சென்னை: தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் பங்களிப்பை செலுத்திய மறைந்த தலைவர்கள், அறிஞர்கள், உள்ளிட்டோருக்கு பெருமை சேர்க்கும்வகையில் காலத்திற்கும் அவர்கள் பெயர் சொல்லும் நினைவகங்கள், சிலைகளை நிறுவி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கட்சி பாகுபாடின்றி, அரசியல் பாரபட்சமின்றி கடந்த 2 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்து கட்டிக் கொடுத்த நினைவகங்கள், நிறுவிய சிலைகள் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப்பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு மண்டபம்.

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னை காந்தி மண்டபத்தில்
திருவுருவச்சிலை. நாமக்கல் நகரில் சுப்பராயன் பெயரில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அரங்கம்.
ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் உத்தமத் தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகரியத்தில் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம்.
ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவாக விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் திருவுருவச்சிலை மற்றும் அரங்கம்.
நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு.
தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ரூ.48.66 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிலை.
தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் சிலை
சென்னை காந்தி மண்டபத்தில், ரூ.42.43 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சிதம்பரனாருக்கு மார்பளவு சிலை.
ரூ.72.50 லட்சம் மதிப்பீட்டில் ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லம் புனரமைப்பு பணிகள் மற்றும் திருநெல்வேலியில் உள்ள
வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாறு ஒலி-ஒளிக் காட்சிப் பணிகள்.
கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில், ரூ.43.70 இலட்சம் மதிப்பீட்டில் வ.உ.சிதம்பரனாருக்கு திருவுருவச் சிலை.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை அமைத்திட நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை.
சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு, கடலூரில் திருவுருவச் சிலை.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை.
தேசிய கீதம் தந்த வங்கக்கவி இரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை இராணி மேரி கல்லூரியில் திருவுருவச் சிலை.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் திருவுருவச் சிலை.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு,புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திருவுருவச் சிலை.
இந்தியத் திருநாட்டின் 75 ஆவது சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களை மேம்படுத்தி 10 நினைவிடங்களில் ஒலி-ஒளிக்காட்சி அமைத்திட நடவடிக்கை.
ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் சென்னை, காந்தி மண்டபம் - அருங்காட்சியகம், காமராஜர் நினைவு மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் நினைவுமண்டபம், மூதறிஞர்இராஜாஜி நினைவுமண்டபம் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை.
சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதிஎத்தலப்பர் நாயக்கருக்கு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் திருவுருவச் சிலையும் திருமூர்த்தி அணை அருகில் அரங்கமும் அமைத்திட நிதி ஒதுக்கீடு.
சென்னை இராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் திருவுருவச் சிலை திறப்பு.
1987ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில் மணிமண்டபம்.
மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு, கோவில்பட்டியில் அரசின் சார்பில் ரூ. 1.51 கோடியில் திருவுருவச்சிலை மற்றும் நூலகத்துடன் கூடிய நினைவரங்கம் திறப்பு.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு தமிழக அரசின் சார்பில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு.
தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபத்திற்கு அடிக்கல். இப்படி, நாட்டுக்கு உழைத்த நல்லோரின் நினைவுகளைக் காத்து வருகிறது மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications