மதுரை டூ சென்னை.. முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்.. என்ன தேதி? என்ன நேரம்? முழு விவரம்!
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு பின் சென்னை திரும்பும் மக்களுக்காக தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை டூ எழும்பூர், தூத்துக்குடி டூ தாம்பரம் மற்றும் ராமநாதபுரம் டூ தாம்பரம் என்று 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் பொங்கல் விடுமுறையுடன், இருமுறை சனி மற்றும் ஞாயிறு நாட்கள் வந்ததால், நாளை (ஜன.17) தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக சென்னையில் இருந்த பலரும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட படையெடுத்தனர்.

இதற்காக சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த விடுமுறை வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைவதால், பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.18ல் சென்னையில் இருந்து மதுரை வரை மெமு எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் ஜன.19ல் மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12.45 மணிக்கு எழும்பூர் சென்றடையவுள்ளது. முன்பதிவு இல்லாத இந்த சிறப்பு ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும் என்பதால், பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஜன.19ல் தூத்துக்குடி - தாம்பரம் இடையில் சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்படவுள்ளது. ஜன.19ல் மாலை 4.25 மணிக்கு புறப்படும் ரயில், அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் கடம்பூர், கோவில்பட்டி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக தாம்பரம் வந்தடையும். இதில் 7 ஏசி பெட்டிகள், 4 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், ஒரு முன்பதிவில்லாத பெட்டியும் இருக்கும்.
அதேபோல் ஜன.19 அன்று ராமநாதபுரம் - தாம்பரம் இடையில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் ரயில், அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில் மொத்தமாக 10 ஏசி பெட்டிகள், 7 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லாத பெட்டிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications