அட.. தமிழிசை மேடம் பப்ளிசிட்டி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. சர்கார் அப்ப ஹிட்டுதான்!

சர்கார் படம் அரசியல் பேசும் படம் என்பதால் இந்த முறையும் தமிழக பாஜக தலைவர்கள் அந்த படத்தை பற்றி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சினிமாவில் மட்டுமே முதல்வராக முடியும்- தமிழிசை சாடல்

    சென்னை: சர்கார் படம் அரசியல் பேசும் படம் என்பதால் இந்த முறையும் தமிழக பாஜக தலைவர்கள் அந்த படத்தை பற்றி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடியே சர்கார் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

    விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் இந்தியா முழுக்க சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சாதாரண ஹிட் படமாக போக வேண்டியது, இந்தியா முழுக்க பாக்ஸ் ஆபிசில் வசூல் அள்ளியது.

    ஜிஎஸ்டி குறித்து இதில் வைத்த வசனம்தான் இதற்கு காரணம். இதற்கு எதிராக தமிழக பாஜக தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கடுமையாக பேசினார்கள். அதன் காரணமாகவே இந்த படம் வைரல் ஹிட் ஆனது.

    [கள்ளக் கதை மூலம் கள்ளஓட்டு குறித்த படம்.. சினிமாவில் மட்டுமே முதல்வராக முடியும்- தமிழிசை சாடல்]

    செய்ய மாட்டேன் என்றார்

    செய்ய மாட்டேன் என்றார்

    இந்த நிலையில் இந்த முறை உஷாராகி சர்கார் படம் குறித்து விமர்சனம் செய்ய மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறிப்பிட்டார். கடந்த மாதம் சர்கார் படம் குறித்து பேசியவர், அந்த படம் குறித்து நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அந்த படத்தை நான் விமர்சனம் செய்து அதை பிரபலப்படுத்த விரும்பவில்லை என்று கூறினார். எதற்கு அந்த படத்தை நான் ஓட வைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    பேசுவார்

    பேசுவார்

    இந்த நிலையில் தற்போது முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும் நிஜத்தில் ஆட்சி செய்ய முடியாது என்று தமிழிசை கூறியுள்ளார். மேலும் கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என்று விஜய் குறித்தும் சர்கார் குறித்தும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    அரசியல் பேசும் படம்

    அரசியல் பேசும் படம்

    முக்கியமாக சர்கார் படம் அரசியல் பேசும் படம் ஆகும். இது தற்கால அரசியல் சூழ்நிலை குறித்து நிறைய விஷயங்களை பேசி இருக்கிறது. முக்கியமாக தற்போதைய அரசியல் கட்சிகள் குறித்தும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மீண்டும் செய்வார்

    மீண்டும் செய்வார்

    இந்த நிலையில் மீண்டும் சர்காருக்கு பாஜக கட்சி பப்ளிசிட்டி செய்யும் என்றே நெட்டிசன்கள் கருதுகிறார்கள். இந்த படத்தில் அரசியல் விஷயங்கள் நிறைய இருப்பதால் தமிழிசை சௌந்தர்ராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் சர்கார் படத்தை விமர்சனம் செய்வார்கள் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்றபடியே தமிழிசையும் தற்போது சர்கார் குறித்து விமர்சனம் செய்துள்ளார். நாளை படம் ரிலீஸ் ஆன பின்பே இவர்களின் நிலைப்பாடு தெரியவரும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+