தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல மழை இருக்கு.. ஆனால்.. எச்சரிக்கும் வானிலை மையம்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் பகல் நேர வெப்பநிலை 6 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலம் காரணமாக ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 4- ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பு இருந்தே தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் அனல் காற்று வீசத்தொடங்கியது. அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது சில இடங்களில் மழையும் பெய்து வந்தது.

இன்று தலைநகர் சென்னையின் 105 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இதே போல வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட்டாகவும், திருவண்ணாமலையில் 103 டிகிரி பாரன்ஹீட்டாகவும், சேலத்தில் 84 டிகிரி பாரன்ஹீட்டாகவும், திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருந்தது.
இதனிடையே தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. . இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தியில். "வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் பகல் நேர வெப்பநிலை 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும். இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications