சென்னை ஓஎம்ஆர் சாலையில்.. பெரிய அளவில் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகளே நோட் பண்ணுங்க!
சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஒருவாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, சென்டரல் முதல் பரங்கிமலை வரை என இரு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் துரத்திற்கு பயன்பாட்டில் இருக்கிறது. இந்த வழித்தடம் கோயம்பேடு திருமங்கலம் வழியாக ஒரு வழியும், பரங்கிமலை, சைதாப்பேட்டை வழியாக ஒரு வழியாகவும் உள்ளது.

முதல் கட்ட மெட்ரோ ரயிலுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, 2 ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
3-வது வழித்தடம் மாதவரம் முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிப்காட் 2 வரை 45.4 கிமீ நீளத்திற்கு அமைக்கப்படுகிறது. இதில் 19 கிலோ மீட்டர் மேம்பாலத்திலும், 26.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமிக்கு அடியிலும் பாதை செல்கிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 49 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
சென்னையில் 4 வது மெட்ரோ வழித்தடம் மெரினா கலங்கரை விளக்கம் முதல் - பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை அமைக்கப்படுகிறது. 26.09 கிமீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 16.02 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 10.07 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 28 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
அந்த வகையில்,தற்போது, சென்னை மெட்ரோ இரயில் கட்டுமான பணி காரணமாக OMR சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து துறை கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினர் தனது கட்டுமான பணியினை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் மேற்கொள்ள உள்ளதால், பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 30.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி SRP சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் YMCA முன்பு புதிய "யு" திருப்பம் செய்து, SRP சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications