கட்டுக்கடங்காத கூட்டம்.. உடனே களத்தில் இறங்கிய சென்னை மெட்ரோ.. 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கம்!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், புறநகர் மின்சார ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மிகக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
சென்னையில் விமானப்படை சாகசத்தை கண்டுகளித்து திரும்பும் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்போது சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ - ஏ.ஜி. டி.எம்.எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் இன்று மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.
விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்திய விமானப்படையின் 72 போர் விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் வான் சாகசங்களில் ஈடுபட்டன. ஹெலிகாப்டர்கள் நடத்திய வான் நடனம் மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

மெரினாவில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண செல்வதற்காக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், லட்சக்கணக்கான பொதுமக்கள், ஒரே நேரத்தில் புறநகர் மின்சார ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் குவிந்தனர். ஓமந்தூரார் அரசினர் தோட்டம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்க உள்ளே செல்லவே முடியாத அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

இதையடுத்து, கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ - ஏ.ஜி. டி.எம்.எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கோயம்பேடு மெட்ரோவில் இருந்து பரங்கிமலை மெட்ரோ மார்க்கமாக செல்லும் ரயில்களும் 7 நிமிடங்கள் இடைவெளியில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications