90 வருடத்தில் 18 முறை மட்டுமே நடந்த அதிசயம்.. மேட்டூரை திறந்து வைத்த ஸ்டாலின்.. பொங்கும் காவிரி
சென்னை: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூரில் இன்று நீர் திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்..
தமிழ்நாட்டில் கடுமையான வெயில் நிலவி வந்தாலும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் இன்று வரை வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை.
வெயில் அதிகரிப்பு: மாறாக, தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையான அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.
காவிரி: தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்தாலும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.41 அடி ஆகும். அதில் தற்போது நீர் இருக்கும் அளவில் 103.48 அடியாகும். ஏற்கனவே குடிநீர் தேவைக்காக இங்கே 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வினாடிக்கு திறக்கப்பட்டு வருகிறது.
இங்கே நீர் வரத்தும் குறைந்து வருகிறது. 865 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 727 அடியாக குறைந்து உள்ளது. இருப்பினும் இன்று மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார்.
சாதனை: முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் 3வது முறையாக சரியாக மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடந்த 2022ம் வருடம் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் தேதி அன்று நீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது.
சுதந்திரம் அடைந்த பின் இதற்கு முன் இப்படி மே 24ம் தேதியே ஒருமுறை கூட மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது இல்லை. அதாவது கடந்த 60 வருடங்களில் ஒருமுறை கூட மேட்டூர் அணை இவ்வளவு சீக்கிரம் திறக்கப்பட்டது இல்லை. பொதுவாக ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

90 ஆண்டுகளுக்கு முன் 1934ல் முதல்முறை இப்படி திறக்கப்பட்டது. அதன்படியே இப்போதும் சரியாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஜூன் மாதம் 12-ந் தேதி இதுவரை 18 முறை மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இந்த முறை 19வது தடவையாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
சரியான தேதியில் தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி நீர் கடைமடை வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீரை எதிர்பார்த்து ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள், மராமத்து பணிகள் நடந்தன. இதை முதல்வர் ஸ்டாலினும் நேற்று முதல்நாள் பார்வையிட்டார்.
டெல்டா மாவட்டங்கள் முழுக்க காவிரி ஆற்றின் பாசனத்தை நம்பியே உள்ளது. சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசனம் காவிரியை நம்பி உள்ளது. அதேபோல் 7 கதவணை மின் நிலையங்கள் மின்சார உற்பத்தி செய்ய இந்த காவிரி நீர் அவசியம் ஆகும். இந்த நீர் முறையாக செல்ல வேண்டும் என்று 4773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications